காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் ? அவரா? இவரா ? 10 ஆம் தேதி முடிவு !

By Selvanayagam PFirst Published Aug 5, 2019, 7:15 AM IST
Highlights

ராகுல் காந்தியின் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது டெல்லியில் வரும் 10-ம் தேதி நடைபெறும் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்காவா அல்லது சச்சின் பைலட்டா ? என கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  படு தோல்வி அடைந்ததற்கு  பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ஆனால் வரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. ஆனாலும் ராஜினாமா முடிவில் ராகுல் உறுதியாக இருப்பதால் வேறு தலைவர் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிற்து.

ராகுலுக்கு  அடுத்தபடியாக தேசிய தலைவர் பதவியை ஏற்று, அக்கட்சியை சரிவில் இருந்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப் போகும் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தமுறை தலைவர் தேர்வு ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ராகுலின் சகோதரி பிரியங்கா காந்திக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் போன்றோர் பிரியங்கா தலைவராக றியமிக்கப்பட வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தல் இந்திரா காந்தி குடும்பத்தை சேராத அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தலைவராக வரலாம் என்றும் பேசப்பட்டது.

இதனிடையே சச்சின் பைலட் மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோருக்கு இந்த தகுதிகள் அனைத்தும் இருப்பதாக நான் கருதுவதாகவும், பஞ்சாப் முதல்மைச்சர்  அமரிந்தர் சிங் நல்ல இளைஞர் என்றும் இவர்களில் யாராவது ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கலாம் என முப்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா வலியுறுத்தியுள்ளார்.. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வரும் 10-ம் தேதி அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது  தீர்மானிக்கப்படவுள்ளது.

click me!