யார் முதல்வர் வேட்பாளர்? கூட்டணிக்குள் குண்டை தூக்கி போட்ட எல்.முருகன்.. குழப்பத்தில் அதிமுகவினர்..!

By vinoth kumarFirst Published Dec 19, 2020, 4:42 PM IST
Highlights

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜகதான் அறிவிக்கும் என எல்.முருகன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜகதான் அறிவிக்கும் என எல்.முருகன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை எழுந்தது. பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரை அமைச்சர்கள் ஆளுக்கொரு பக்கம் சந்தித்து பேசி, அவர்களை சமாதானம் செய்து, இறுதியில் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. இதையடுத்து எடப்பாடியார் தான் முதல்வர் வேட்பாளர் என உறுதியானது. ஆனால், முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் தொடர்ந்து கூறிவருகிறார். 

இந்நிலையில், அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்;-  யார் முதல்வர் வேட்பாளர் என்பதை தலைமைதான் முடிவு செய்யும். தற்போதைய கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தொடரும். ஆனால். யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என தலைமைதான் முடிவெடுக்கும் என்றார்.

click me!