ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் யார்? இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே இழுபறி...

 
Published : Nov 27, 2017, 12:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் யார்? இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே இழுபறி...

சுருக்கம்

Who is the candidate of RK Nagar By election

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, இடைத் தேர்தலில் போட்டியிட, அதிமுக வேட்பாளர் தேர்வுசெய்வதில்,  ஒபிஎஸ், இபிஎஸ், இருவருக்கும் பேச்சு வார்த்தைகள்நடைபெற்றுவருகிறது. மதுசூதனனா ? அல்லது கே.பி.முனுசாமியா? என்பது தான் இப்போதையா ஹதஙட டாபிக்காக இருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  தொகுதியான ஆர்.கே.நகரில்   கடந்த ஏப்ரல் 12 ம் தேதி  இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் வாக்காளர்களுக்குபணப் பட்டுவாடா  செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இதையடுத்து  ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும், வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத் தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

வழக்கமாகத் தேர்தல் நேரங்களில், அதிமுக,தான் முதலில் வேட்பாளர்களை அறிவிக்கும். அப்படிப்பட்ட அதிமுக தற்போது வேட்பாளரை அறிவிக்கக் காலதாமதம்செய்துவருகிறது.

ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், கடந்த ஏப்ரல் மாதம் 62 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரன், அதிமுக புரட்சித்தலைவி அணி வேட்பாளராக மதுசூதனன், திமுக வேட்பாளராக மருதுகணேஷ், மூவரும் முன்னணி வேட்பாளர்களாக இடம் பெற்றனர். அப்போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருந்தது. இதனால் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் மின்விளக்கு சின்னத்திலும் போட்டியிட்டனர்

ஆனால் தற்போது இபிஎஸ, ஓபிஎஸ் அணிகள் இணைந்து இரு தரப்பினருக்கும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இணைந்த பிறகு  முதல்இடைத் தேர்தலை சந்திக்கிறார்கள்.  திமுக வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். டி.டி.வி. தினகரன் கட்சியையும், சின்னத்தையும் இழந்தும்,மனம்தளராமல்  சுயேச்சையாக  போட்டியிடுகிறார்.

மதுசூதனன் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார்  அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அனைவரும்  எதிர்ப்புகள் தெரிவித்ததால், மதுசூதனன் இல்லாமல், வேறு நபரைச் சொல்லுங்கள் என்று ஓபிஎஸ்க்கு  வாய்ப்பு கொடுத்துள்ளாராம் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி. பன்னீர், இதனால் மதுசூதனனை  சமாதானம் செய்து , கே.பி. முனுசாமி பெயரைப்  ஓபிஎஸ் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்யும் ஆட்சி மன்ற குழுக் கூட்டம் இன்னும்  சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. ஒருவேளை இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கே.பி.முனுசாமி பெயர்தான் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. மதுசூதனனா ? கே.பி.முனுசாமியா ? இன்று தெரிந்துவிடும்!

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!