அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்.? வெல்லப்போவது தென்மாவட்டமா? வடமாவட்டமா.? பரபரப்பான செயற்குழு...!!

By T BalamurukanFirst Published Sep 28, 2020, 10:48 AM IST
Highlights

தமிழக அரசியல் பரபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற போட்டா போட்டி அதிதீவிரமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
 

தமிழக அரசியல் பரபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற போட்டா போட்டி அதிதீவிரமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக இருந்த ஓபிஎஸ் போயஸ் கார்டனில் நடந்த சந்திப்பிற்கு பிறகு தர்மயுத்தம் நடத்தினார்.எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க சசிகலா விரும்பினார். அதன்படி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா. இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆட்சியை நகர்த்தி வருகிறார் எடப்பாடி.பழனிச்சாமி. தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவன் நான் கட்சி ஆட்சியை விட்டுத்தர முடியாது. ஆட்சிக்கும் கட்சிக்கும் நான் தான் என ஓபிஎஸ் கறாராக சொல்லியபின் கட்சிக்குள் போட்டி கடுமையாகி இருக்கிறது. ஒருவழியாக கட்சிக்கு ஒபிஎஸ் ஆட்சிக்கு இபிஎஸ் என்று பேசி முடித்திருப்பதாக தெரிகிறது.


இதுஒருபுறம் இருக்க சசிகலா விடுதலை அதிமுகவிற்கு அடுத்த தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழக்கு இன்னும் தேர்தல் ஆணையத்தால் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை.இன்று நடக்கும் செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இருக்கிறது."நான் துணை முதல்வராக இருந்தாலும் எனக்கு எந்த மரியாதையும் இல்லை. நான் உங்களிடம் துணை முதல்வர் பதவி கேட்கவில்லை. எதற்காக தர்மயுத்தம் நடத்தினேனோ? அதற்கான நோக்கம் ஈடேறாமல் இருக்கிறது.என்னால் கட்சியை விட்டுக்கொடுக்க முடியாது என்று உடும்புபிடியாக இருக்கிறார் ஓபிஎஸ்"

.

பாஜக அதிமுகவில் பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது. ஓபிஎஸ் இபிஎஸ் சசிகலா என மூவரையும் ஒன்றாக இணைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க விரும்புகிறது. அதனால் தான் தனிவிமானத்தில் டிடிவி தினகரனை அழைத்து பேசி கண்டிசன்களை போட்டு அனுப்பியிருக்கிறது.இந்த நிலையில் தான் இன்று செயற்குழு கூடியிருக்கிறது.

 அடுத்து அதிமுகவில் கட்சிக்கு யார் ஆட்சிக்கு யார்? என்கிற போட்டி  இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இருவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய செற்குழு கூட்டத்தில் பெரிய அளவில் தீர்மானமோ திருப்பு முனையோ இருக்க வாய்ப்பு இல்லை. அடுத்து நடக்கப்போகும் பொதுக்குழு கூட்டத்திற்கு இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இருதரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

 பெரும்பாலான மாநில, மாவட்ட, செயற்குழு உறுப்பினர்கள் இபிஎஸ் பக்கம்தான் இருக்கிறார்கள். அந்த வகையில் வேலுமணி, தங்கமணி ஆகியோர் இபிஎஸ்சின் பேக்அப்பில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் எம்பியின் நடவடிக்கைகள் இபிஎஸ் தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். குறிப்பாக முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் இபிஎஸ்சுக்கு விட்டுக்கொடுக்க ஓபிஎஸ் முடிவு செய்து விட்ட நிலையில் ரவீந்திரநாத் திடீரென களம் இறங்கியிருப்பது கட்சி சீனியர்கள் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

 குறிப்பாக தென்மாவட்டங்கள் மட்டுமல்லாது ஓபிஎஸ்சின் பழைய ஆதரவாளர்களுக்கு போன் போட்டு வலைவீச ஆரம்பித்திருக்கிறார் ரவீந்திரநாத். இப்படியாக கடந்த 2 நாட்களாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பிர்கள் என கிட்டத்தட்ட 50  பேரிடம் பேசியிருக்கிறார் ரவீந்திரநாத் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள். இந்த விஷயத்தில் கே பி முனுசாமி ஒதுங்கி விட்ட நிலையில் ரவீந்திரநாத்தின் இந்த முயற்சிக்கு வைத்தியலிங்கம் மறைமுகமாக உதவிவருவதும் இபிஎஸ் தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

click me!