அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிர்ச்சி... 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Published : Sep 28, 2020, 10:02 AM IST
அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிர்ச்சி...  15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சுருக்கம்

அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில்  இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ளது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழுவில் 284 பேர் பங்கேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்தது. 

கூட்டத்திற்கு வருகை தரும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள செயற்குழு உறுப்பினர்களும் அங்கேயே பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். இவர்களின் பரிசோதனை முடிவுகள் விவரம் தலைமைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது. 

இந்நிலையில், அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 284 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 15 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா பாசிட்டிங் உள்ளவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?