“தியானத்துல உட்காந்தாலே பிரச்சனை தான்” புள்ளி வச்சது யார்? வாட்டி வதைக்கும் ‘தியான’ டெக்னிக்...

First Published Jan 25, 2018, 5:38 PM IST
Highlights
who is introduce meditation Technic


பதவி பறிகொடுத்த கடுப்பில் பன்னீர் தியானம் இருந்ததில் தொடங்கி, அத்தை சமாதியில் ஆற அமர தியானம் போட்டு வந்த தீபாவை அடுத்து குடும்ப சண்டையால் வந்த மாதுகுட்டி ஒரு குட்டி தியானம் போட்டார், இவரை அடுத்து வந்து சபதம் செஞ்ச சின்னம்மா ஜெயிலுக்கு போகும் முன் புரட்சித்தலைவர் வீட்டுக்கே போய் தியானமிருந்தார். இப்படி தியானத்தால் தடுமாறிக்கொண்டிருந்த தமிழகத்தில் தற்போது தலையை கொடுத்து சிக்கிக் கொண்டவர் காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர்.

ஆமாம் எதுக்காக இந்த தியானம்? புள்ளி வச்சது யார்? 

பிள்ளையார் சுழி போட்ட பன்னீர்...

கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த தியானப் புரட்சியை தமிழக மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் தான். முதல்வர் பதவியை சசிகலா பறித்துவிட்டதால் விரக்தியடைந்த பன்னீர்செல்வம் திடீரென்று மெரீனா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து சுமார் நிமிடம் ஒட்டு மொத்தத்த தமிழகத்தையும் கதறவிட்டார்.

பன்னீர் தியான பலன் அதோடு விட்டதா? கம்பிக்குள் தியானம் பண்ண பெங்களூருவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால், ரெண்டு நாளாவது ‘தமிழகத்தின் நிரந்தர’முதல்வராக உட்காருகிற பாக்கியத்தை சின்னம்மாவிடம் இருந்து பறித்து, பொதுசெயலாளர் சின்னம்மா என்ற பதவியிலிருந்து முதல்வர் சின்னம்மா என்ற கனவில் மண்ணை வாரிப் போட்டார் பன்னீர்.   பன்னீர் தொடக்கி வைத்த இந்த தியானப் புரட்சி, அதிமுக தொண்டர்கள் யார் எப்போது தியானம் செய்வார்கள், எந்த நேரத்தில் சமாதிக்கு போவார்கள் என்ற பீதி இன்னும் ஓயவில்லை.

மூணு லட்சத்து சொச்சம் கோடி கடன்!

பன்னீரை பதவியை புடிங்கி அனுப்பிய பிறகு அவர் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டிருந்த நிதி அமைச்சர் பதவி ஜெயக்குமார் கைக்கு போனது, பாவம் அவர் தலைகால் புரியாமல் ஆடித்தான் போனார். எந்த சமாதி முன் உட்காந்து பதவியை பரிகொடுத்தாரோ அதே சமாதிக்குப் பொய் பட்ஜெட் பெட்டியை அம்மாவிடம் சமர்பித்து, அப்படியே தானும் கொஞ்சம் தியானம் போட்டார். வந்து பெட்டியைப் பிரித்தபோது, காத்திருந்தது செம ஷாக்.

அது என்னன்னா மூணு லட்சத்து சொச்சம் கோடி கடன்தான் சாதனை ஒளிந்திருந்தது தெரிந்தது. அவசரப்பட்டு இந்த நிதி அமைச்சர் பதவியை வாங்கிவிட்டோமோ? நம்மை உஷார்படுத்தவில்லையே அம்மா அதிலிருந்து மனுஷன் தியானம் பற்றி யோசிக்கவே இல்ல...

தீபாவின் தியானம்...

சசிகலா மீது இருந்த கோபத்தில்ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதா பிறந்தநாளன்று எம்ஜியார் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் பேரவை துவங்கினார். இதன் பொருளாளராகவும் தன்னை தானே நியமித்து கொண்டார். இதனையடுத்து அவர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட போவதாக அறிவித்தார். மேலும் ஒருநாள் இரவு 7.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தனது அத்தையின் நினைவித்திற்கு வந்த தீபா, பேரவை உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை வைத்து அங்கு தியானத்தில் அமர்ந்தார்.

தீபாவுடன் அவரது கணவரும் தியானத்தில் அமர்ந்துள்ளார். தீபாவின் தியாகத்திற்கான காரணம் விபரங்கள் இதுவரை சொல்லப்படவில்லை, ஓபிஎஸுன் மெரினா புரட்சியை போல தீபாவின் தியானம் தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வருமா? என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் புசுவானமாக்கிப்போனது தீபாவின் தியானம்...

மாதவனின் குட்டி தியானம்...

ஒருநாள் தீபாவுக்கு அவரது கணவருக்கும் சந்தை ஏற்பட்டதால் திடிரென்று ஜெயலலிதா சமாதிக்கு வந்த அவரது கணவர் மாதவன் தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்துள்ளன. எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையில் உள்ள தீய சக்திகள் யார் என்பதை தகுந்த நேரம் வரும்போது மக்களிடம் அறிவிப்பேன்.  தீபா தன்னிச்சையாக செயல்படவில்லை. ஆர்.கே.நகரில் போட்டியிடுவது தொடர்பாக மக்களிடம் பேசி முடிவு செய்வேன்' என்று ஒரு குட்டி தியானத்தைப் போட்டுவிட்டு சென்றார். ‘‘அத்தை நான் உங்க தீபா’’ என்று சொல்லிவிட்டு வந்தவர், ஏதாவது நல்வாக்கு தருவாங்க என்று பார்த்தார்.

ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை. எதிர் வினையாக அவரது கணவரே தீபா கூட சண்டை போட்டுவிட்டு பேரவையை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்க அவரும் தியானத்தில் போட்டார். ஐயகோ! தேர்தல் நேரத்தில் கட்சிகளை உடைத்து விளை யாடும் அம்மா, தன் மறைவுக்குப் பிறகு அண்ணன் மகள் வீட்டிலேயே ஆன்மா விளையாடிவிட்டது.

சசிகலா சப்த தியானம்...

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி பெங்களுரு ஜெயிலுக்குப் போவதற்கு முன்னதாக முதலில் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அடித்து சபதம் செய்த சசிகலா பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமாபுரம் சென்ற சசிகலா கறை படியாத கை எனப் போற்றப்படும் எம்ஜிஆரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அப்போது பன்னீர் பாணியில் வீட்டின் தரையில் அமர்ந்து கண்களை மூடி சசிகலா தியானம் மேற்கொண்டார்.

தியானம் 2.0

வங்க மொழியில் பாடப்பட்ட தேசிய கீதத்தைக் கேட்ட உடன் தியானம் கலைந்து டக்கென எழுந்த விஜயேந்திரர். தமிழில் பாடிய வாழ்த்து காதில் வாங்காமல் அமர்ந்துகொண்டிருக்கிறார்.

தமிழ் தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை தரல? ஏன் எழுந்து நிற்கல என கேட்டால் .. தியானத்தில் இருந்தார், அப்போது கலையவில்லை, அதனால் எழுந்து நிற்கவில்லை,  செம்ம விளக்கம் தந்து கடுப்பக்கியது  சங்கர மடம். ஒருவரால் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் தியானம் செய்ய முடியுமா? தியானம் குறித்துப் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறிவருகிறார்கள்.

இப்போது எல்லோருக்குமே பரவிவிட்டது இந்த ‘தியான டெக்னிக்’ !  இன்னும் என்னென்னல்லாம் நடக்கப்போகுதோ?

click me!