
ஜெயலலிதாவின் சகோதரி என்று கூறி வந்த ஷைலஜாவின் மகள் அம்ருதா. இவர், இவ்வளவு நாட்களாக ஜெயலலிதாவை பெரியம்மா என்று அழைத்து வந்தார். ஆனால், இப்போதோ தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வருகிறார். அம்ருதா இப்படி கூறுவதற்கு காரணம், ரஞ்சினியும், ரவிந்திரநாத்தையும்தான் கூறுகிறார்கள்.
ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவுக்கு உறவினரான ரஞ்சினி. இவருக்கும் சசிகலாவுக்கும் நல்ல நட்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை, ரஞ்சினி சந்தித்துள்ளாராம். இதன் பின்னரே, ஜெயலலிதாவின் அத்தை மகளான லலிதாவிடம் அம்ருதாவை அழைத்து சென்றிருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது, ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உனக்கு தெரியும், அந்த குழந்தை யாருன்னு தெரியுமா? என்றும் அது அம்ருதாதான் என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அம்ருதா நீதிமன்றம் போகப் போவதாகவும் அவருக்கு துணையாக நான் இருக்கப் போவதாகவும் கூறியுள்ளார். அதற்கு லலிதா, ஜெயலலிதாவின் குழந்தை யாருன்னு கண்டுபிடிச்சா சந்தோஷம்தான். கண்டுபிடிங்க. ஆனால் நான் எங்கேயும் வரவில்லை என்றாராம்.
உச்சநீதிமன்றத்துக்குப் போன அம்ருதாவுக்கு துணையாக ரஞ்சினிதான் உடன் சென்றுள்ளார். இப்போது அம்ருதா ரஞ்சினி கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். சசிகலா என்ன சொல்கிறாரோ அதைச் செய்யும் இடத்தில் ரஞ்சினி இருக்கிறார். அது மட்டுமல்லாது ஜெயலலிதா குடும்ப ரகசியங்கள் தெரிந்த ரஞ்சினி மூலமாக அம்ருதாவை களத்தில் இறக்கியுள்ளார் சசிகலா.
இதனால் சசிகலாவுக்கு என்ன லாபம்? ஏற்கனவே கட்சி விட்டுப் போய்விட்டது. சொத்துக்களுக்கு தீபா உரிமை கொண்டாடி வருகிறார். ஜெயலலிதாவின் நேரடியான வாரிசு வந்துவிட்டால், சொத்தும், கட்சியும் மீட்டெடுத்துவிடலாம் என்று சசிகலா நினைக்கிறார்.
அம்ருதா, தன்னை மீறி எதுவும் செய்ய மாட்டார். அவர் வெளியே வருவது நல்லதுதான் என்று சசிகலா நினைக்கிறார். மேலும், ஜெ.வின் வாரிசு அம்ருதா என்று சொன்னால் கட்சிக்குள்ளும் குழப்பம் வராது, சொத்துக்கு சொந்தம் கொண்டாடி வருபவர்களும் அமைதியாகிவிடுவார்கள் என்பதுதானாம்.
அம்ருதா நீதிமன்றம் சென்றது குறித்து இதுவரை முதலமைச்சர் பழனிசாமியோ, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ இதுவரை வாய் திறக்கவில்லை. சசிகலா குடும்பத்தை விமர்சித்தவர்கள், அம்ருதாவைப் பார்த்ததும் அமைதியாகி விட்டார்கள்.
ஜெ.வுக்கு வாரிசு இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அது அம்ருதாவா? இந்த கேள்விக்கெல்லாம் டி.என்.ஏ. பரிசோதனை நடந்தால் மட்டுமே விடை கிடைக்கும்...