தமிழகத்தில் அடுத்த ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்..? இன்னும் 24 நாட்களுக்கு திக்..திக்..திக்..!

By Thiraviaraj RMFirst Published Apr 7, 2021, 9:06 AM IST
Highlights

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் தேர்தல் முடிவை அறிய இன்னும் 24 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அஸ்ஸாமுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அஸ்ஸாமில் 3ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அந்த மாநிலத்தில் வாக்குப்பதிவு முழுமையாக முடிந்தது. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 71,79 சதவீத வாக்குப்பதிவும், புதுச்சேரி 81 சதவீத வாக்குப்பதிவும், கேரளாவில் 71.3 சதவீத வாக்குப்பதிவும் நடைபெற்றது. வாக்குப்பதிவு எண்ணிக்கையில் சற்று ஏற்றம் இறக்கம் இருக்கலாம்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு முடிவுக்கு வந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தற்போதைய நிலையில் 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு முழுமையாக முடிந்துவிட்டன. அதேவேளையில் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு பாக்கி உள்ளது. 
மேற்கு வங்காளத்தில் 8-ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் 8 கட்டத் தேர்தல் முடிந்த பிறகே மே 2 அன்று 5 மாநிலங்களுக்கும் சேர்த்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எனவே தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், ஆட்சியைப் பிடிக்க போகும் கட்சி எது என்பதை அறிய இன்னும் 24 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 
 

click me!