
குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
இதுகுறித்து யாரை வேட்பாளராக அமைக்கலாம் என காங்கிரஸ் தரப்பில் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
மேலும் பாஜக தரப்பில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவரும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவரும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநருமான திரவுபதி மர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே குடியரசு தலைவருக்கான வேட்பு மனுதாக்கல் ஜூன் 14 ஆம் தேதி தொடகுவதாகவும், ஜூலை 17 ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை 20 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ள்ளார்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ள்ளது.
இந்த குழுவில் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, ராஜ்நாத்சிங் ஆகியோரை நியமித்து பாஜக தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிகளுடன் இந்த குழு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.