களத்தில் குதிக்கும் திமுக... தேர்தலுக்கு இப்போதே வேலைகள் ஆரம்பம்!!!

 
Published : Jun 12, 2017, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
களத்தில் குதிக்கும் திமுக... தேர்தலுக்கு இப்போதே வேலைகள் ஆரம்பம்!!!

சுருக்கம்

DMK Starts it is work for Tamil nadu Assembly Elections

திமுக தகவல்  தொழில் நுட்ப அணிச் செயலாளராக மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் P.T.R. பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் பழம்பெரும் தலைவராக திகழ்ந்தவர் P.T.R. பழனிவேல் ராஜன். திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தார். யாருக்கும் அஞ்சாமல் மிகவும் நேர்மையாக செயல்படுபவர் என பெயர் பெற்றவர்.

சட்டப் பேரவையில் திமுக தலைவர் கருணாநிதியின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவர். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்  துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபின் சேன்னையில் இருந்தது மதுரைக்கு ரயிலில் திருப்பிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்நிலையில் அவரது மகன்  P.T.R. பழனிவேல் தியாகராஜன் கடந்த தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட் வெற்றிபெ ற்றார்.

இந்நிலையில் திமுக தகவல்  தொழில் நுட்ப அணிச் செயலாளராக தகவல்  தொழில் நுட்ப அணிச் செயலாளராக P.T.R. பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது திமுக சட்ட விதிகளின்படி தகவல் தொழில் நுட்ப அணி உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக P.T.R. பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!