சென்னையில் தொடரும் தீ விபத்துக்கள் - சாலையில் திடீரென பற்றி எரிந்த ஷேர் ஆட்டோ!!

 
Published : Jun 12, 2017, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
சென்னையில் தொடரும் தீ விபத்துக்கள் - சாலையில் திடீரென பற்றி எரிந்த ஷேர் ஆட்டோ!!

சுருக்கம்

share auto burnt in nungabakkam

சென்னை தியாகராயநகரில் சென்னை சில்க்ஸ்சை தொடர்ந்து  பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று அபிராமபுரம் ஏர்டெல் அலுவலகம், தினா கலர் லேப் போன்றவை தீ விபத்தில் சிக்கி உருக்குலைந்து போன நிலையில் இன்று நுங்கப்பாக்கத்தில் டாடா மேஜிக் ஷேர் ஆட்டோ ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்தது

கடந்த 31 ஆம் தேதி தியாகராயநகர் சென்னை சில்க்ஸ் தீ பிடித்து எரிந்து முற்றிலும் சாம்பலானது. இதைனத் தொடர்ந்து அந்த கட்டடம் தற்போத இடிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்நது சிந நாட்களில் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள ஹோட்டல் தீ பிடித்து எரிந்ததது.

புரசைவாக்கத்தில் உள்ள வணிக உள்ள துணிக்கடை ஒன்றில்  ஏசி மிஷினில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின்  உரிமையாளர் சுசீலா இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தார். ஆனால் அதற்குள் துணிக்கடையில்  மளமளவென தீ பிடித்தது.

அதை தொடர்ந்து அருகில் உள்ள பியூட்டி பார்லருக்கு தீ பரவியது. சிறிது நேரத்தில் ராசிக் கல் கடையிலும் தீ பிடித்து புகை  மண்டலமாகக் காட்சியளித்தது. இதில் கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

இதே போன்று நேற்று சென்னை அபிராமபுரத்தில் கலர் லேப் மற்றும் ஏர்டெல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இந்நிலையில் இன்று நுங்கப்பாக்கத்தில் டாடா மேஜிக் ஷேர் ஆட்டோ ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தின் முன்புறம் புகை வந்தததையடுத்த வண்டியை நிறுத்திய டிரைவர் இறங்கி பார்த்தபோது, திடீரென தீப்பிடித்தது.

சென்னையில் நாள்தோறும் தீவிபத்து ஏற்பட்டு வருவது பொது மக்களை அதிர்ச்சிஅடையச் செய்துள்ளது

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!