எம்.ஜி.ஆர். சின்னம் நீடிக்குமா...? முடக்கப்படுமா...? - இரட்டை இலை ஓபிஎஸ்சுக்கா..? சசிகலாவுக்கா...?

 
Published : Mar 21, 2017, 12:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
எம்.ஜி.ஆர். சின்னம் நீடிக்குமா...? முடக்கப்படுமா...? - இரட்டை இலை ஓபிஎஸ்சுக்கா..? சசிகலாவுக்கா...?

சுருக்கம்

who going to get irattai ilai symbol for rk nagar

கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர். பின்னர், அவர்களுக்குள் 

கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஓ.பன்னீர்செல்வம்  தனியாக பிரிந்து சென்றார். இதையொட்டி அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதிக்கான இடை தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுகவின் சசிகலா அணியில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். 

இந்த இரு அணியினரும், தங்களுக்கே இரட்டை இலை சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மாறி மாறி முறையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஓ.பி.எஸ். அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் சார்பில் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டது,

கட்சியின் விதிமுறைகளுக்கு முரணானது. ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சட்டரீதியாக உரிமை இல்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தொடர்பான, ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கூடிய பிரமாண பத்திரங்களை பதில் அளிக்குமாறு கோரி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு கடந்த 17ம் தேதி தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சசிகலா தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்குள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு அவருக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது.

இதையொட்டி, ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 6,000 பேர் கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களை, அவர்கள் தரப்பு வக்கீல் பாலாஜி சீனிவாசன் நேற்று தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தார்.

அதில் ஓ.பி.எஸ். அணியின் 11 எம்.பி.க்கள், 12 எம்.எல்.ஏ.க்கள், அதிமுகவின் மாவட்ட, கிளை நிர்வாகிகள், சில பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், சசிகலா தரப்பிலும் இதே போன்று ஆதரவை உறுதி செய்யும் பிரமாண பத்திரங்கள் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் பிற ஆவணங்களுடன் சேர்த்து இந்த பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் என்று கருதப்படுகிறது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்குவது என்பது குறித்து தேர்தல் கமிஷன் நாளை இறுதி விசாரணை நடத்துகிறது. இதில் இரு தரப்பினரும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.

இந்த விசாரணைக்கு பின்னர் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் கமிஷன் அறிவிக்கும். ஒருவேளை அந்த சின்னம் முடக்கப்பட்டால் டி.டி.வி.தினகரனுக்கும், மதுசூதனனுக்கும் வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்