அன்று சரியாக 11 மணிக்கு ஆர்.கே.நகர் பூத்திலிருந்து புறப்பட்டது யார்? ஒரு மடலால் மனமுடைந்த ஸ்டாலின்...

First Published Dec 28, 2017, 8:06 PM IST
Highlights
who escaped from rk nagar booth on 21st and stalin felt bas reg letter


2ஜி வெற்றியை கொண்டாட போனவர்கள் திரும்பி பூத்திற்குள் வரவே இல்லையா.. ஓட்டபந்தயத்தில் நடுவே கொண்டாட்டம் எதற்கு.. வெற்றி மட்டுதானே நமது இலக்கு என திமுகவின் படுதோல்விக்கு திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முகநூளில் பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைதேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரனிடம், வெற்றியை பறிகொடுத்தது ஆளும் அதிமுகவும் பலமிக்க எதிர்கட்சியும், இதில் பரிதாபம் என்னவென்றால் திமுக டெபாசிட் தொகையை இழந்து படுதோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கு 2ஜி வழக்கின் தீர்ப்பை, வாக்கு பதிவு நாளில் வெளியிட்டது தான் காரணம் என திமுகவினர் புலம்புகிறனர். தீர்ப்பு பாதகமாக வந்திருந்தால் கூட ஒட்டுமொத்த திமுகவினரும் ஆர்.கே.நகரில் சரியாக வாக்குகளை வாங்க களத்தில் இறங்கியிருப்பார்கள். ஆனால் சாதகமாக வந்ததால் திமுக தொண்டர்களை திசசி திருப்பிவிட்டதாக இந்த கடிதத்தில் கூருகின்றனர்கள்.

இப்படி திமுகவின் தோல்வியை ஆராய்ந்து  பதிவிட்ட ஒரு தொண்டரின் மனம் திறந்த மடல் இதோ;   

அன்பின் தளபதி அவர்களுக்கு..,

வணக்கம்..

இந்த நேரத்தில் இந்த கடிதம் எழுதவேண்டி வந்ததில் வருத்தமுண்டு..
கார்டு இல்லா கழகத்தவர் என்ற அடையாளத்தோடு தொடர்ந்து திமுகவை பின்துணைக்கும் நிறைய பேர்கள் உண்டு அதில் ஒருவனின் மடல்..
..
அதிகம் எதிர்பார்க்கபட்ட தலைமை .. தாங்கள் செயல்தலைவராகி நடந்த முதல் தேர்தல் இதில் கவனம் செலுத்தியதில் ஏற்பட்ட பிழையை ஒருமுறை ஆய்வது வரும் காலங்களில் தவறில் இருந்து மீண்டுவர உதவும்..


..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை இனம் கண்டு தங்களை முன்னிலைபடுத்தியதில் பெரும் மகிழ்ச்சி கொண்டவன்.. ஆனால் தலைமைக்குரிய சிறந்தபண்புகளில் ஒன்றான ஒருங்கிணைந்து வழிநடத்தல் எங்கோ பிசறியிருக்கிறது..தலைவர் கலைஞர் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னால் அதிருப்தியாளர்களை அழைத்து பேசி பிறகுதான் களம்காண்பார் அந்த விடயம் இந்த தேர்தலில் காணமுடியவில்லை..
..
நண்பர் ஒருவர் இப்படி எழுதுகிறார்.. 

தினகரன் 100 பேருக்கு ஒருவரை நியமித்து காலையிலும் மாலையிலும் அங்குள்ளவர்களுக்கு வணக்கம் சொல்லி .. அந்த பகுதி மக்களோடு இரண்டற கலந்தார்கள் .. திமுகவினரோ வெற்றிபெற்றுவிடுவோமென்ற மமதையில் களப்பணியை சரிவர செல்லவில்லை .. அதோடு 2ஜி வெற்றி களிப்பில்.. தேர்தல் வாக்குபதிவை கவனிக்க தவறியதும் களத்தில் 11 மணி முதல் 3 மணி வரையான நேரம் மிக முக்கியமென்பதை மறந்ததும் .. கடமைக்கு கடமையாற்றியதும் மிகப்பெரிய தோல்விக்கு காரணம் என்கிறார்..

சட்டென்று கடந்து போகமுடியவில்லை..

சிங்கப்பூரிலிருந்து வாக்களிக்க வந்தவர் .. வாக்குசாவடியில் திமுகவினரே இல்லை ‍இதை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன் என்கிறார்.. 2ஜி வெற்றியை கொண்டாட போனவர்கள் திரும்பி பூத்திற்குள் வரவே இல்லையா.. ஓட்டபந்தயத்தில் நடுவே கொண்டாட்டம் எதற்கு.. வெற்றி மட்டுதானே நமது இலக்கு..



பணம் விளையாடியதென்றோ ராஜதந்திரமென்றோ நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் விரைந்து தவறியதின் காரணத்தை அறிதல் வேண்டும்.. கட்டிவச்ச காசு போனதல்ல பிரச்சனை.. எங்கு தவறென்பதை அறிந்திராவிடில் .. தோல்விகளை நம்மை துரத்தும்..

கசங்காத வேட்டியோடு வந்து போகிறவர்கள் அல்ல கழகம் அடிமட்ட தொண்டன் அவன் எண்ணத்தை உள்வாங்கவேண்டும் .. ஒரு சிறிய பொறி போதும் சுட்டெறித்து சாம்பலாக்கிவிடும் என்பதை உணர்தல் மிக அவசியம்..பொறுப்புள்ள முதன்மை செயலர் துரை முருகனின் பொறுப்பற்ற பேச்சு ..வேதனையின் உச்சம் ..திமுக வாக்குகளை பணம் தின்றுவிட்டதென்ற சொல் காயபடுத்தியது தெரியாமல் சிரிக்கிறார்.. பணம் ஒரு எல்லைவரை பாய்ந்திருக்கும் ..மறுக்கவில்லை ஆனால் இங்கே 

காட்டாற்று வெள்ளமாய் நம்மை புரட்டி போட்டிருக்கிறது... பணம் மட்டுமே காரணமென நம்மை நாமே சமாதானம் செய்துகொள்வதில் பலனில்லை..

நிறைய மாற்றங்கள் தேவை அதைவிட அதீத ஜனநாயகமுறை உட்கட்சி தேர்தலில் தேவையில்லையென நினைக்கிறேன் வேண்டியவர்களை நிறுத்தி வெற்றிபெற செய்யும் மா.செ. தந்திரங்களை தடுத்தி நிறுத்தி கொஞ்ச காலம் தலைமையின் நேரடியாக
நியமனமாக செய்யலாம்.. தொடர்ந்து மா.செ.க்கள் அதிகாரம் செலுத்தும் நிலை மாறவேண்டும்..அடியோடு மாற்றமென்பது அவசியமெனபடுகிறது.. முன்பெல்லாம் அதிகளவில் கூட்டங்கள் .. அது இலக்கிய நிகழ்வாக இருந்தாலும் அதிலும் அரசியல் கலந்தாய்வு நடந்தது தெருமுனை கூட்டங்கள் திண்ணை பிரச்சாரங்கள்.. எளிய மனிதரின் சாயங்கால பொழுதில் இயக்கத்தின் செய்திகளை கொண்டு சேர்த்தது.. இதெல்லாம் மறந்துபோனார்கள்..


..
R.K. நகர் தோல்விக்கான காரணத்தை ஆய்ந்து களைகள் கலையபடும் என்ற அறிக்கை..
சென்ற பொதுதேர்தல் தோல்விக்கு பிறகு சொன்ன அதே வாசகம் இதுவரை செய்யாததின் காரணம் ..
விட்டுபிடிக்காலாமென நினைத்திருந்தால் மாற்றுங்கள் மாற்றங்கள் புதிய வழியை .. காட்டும்
..
இறுதியாக தலைமைத்துவம் குறித்து அப்பனிடம் கற்றதை வெளிகாட்டுங்கள்..
கலைஞர் குறித்து.. 
1962 ல் தஞ்சை தேர்தலில் .. எதிர்த்து வாக்குகேட்க வந்த பேராசான் பெரியார்.. கலைஞரைப்பற்றி புகழ்ந்து பேசிய வரிகளை நியாபக படுத்துகிறேன்..
"கருணைநிதியிடம் ஒரு பொறுப்பை
தந்துவிட்டால் அதை முடிக்கிறவரை அதில் வெற்றி பெறுகிறவரை ஊன்உறக்கமின்றி செயலாற்றுவான்'' என்றார்..
நிறைய எழுதவேண்டியிருக்கிறது ஆனாலும் 
நம்பிக்கை ..களைகளை களைந்து பயிரை காப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு..
..
எம் இனிய நண்பர் தங்கம் தென்னரசு ..
Thangam Thenarasu
எழுதிய கவிதையில்..

"முரசுகள் முழங்கட்டும்! 
முகாரிகள் ஒதுங்கட்டும்!!

எம் இனத்தின் விடிவெள்ளி நீ!
எம் இயக்கத்தின் விதை நெல் நீ!!

"களிறுதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக் 
கையகத்தது அது: பொய்யா காதே;
வருந்த வேண்டா; வாழ்க அவன் தாளே!".. என எழுதியிருக்கிறார்..
..
மறுப்பேதுமில்லை..
எம் இயக்கத்தின் விதை நெல் தான் ..நீ..
ஆனால் .. வயல் செம்மைபடுத்தபடவில்லையெனில்..மண் வளமில்லையெனில்.. விதை வீரியமாக இருந்தும்..
விதைத்தும் பலனில்லாமல் போகும்..
உழைப்பு வீணாகும்.. முதலில் வயலை சரிசெய்வோம்..
..
காலம் நமக்காக காத்திருக்காது.. காலத்தை நமதாக்குவோம்..
தொட்டுவிடும் தூரம்தான் வெற்றி..
வீணர்களை துரோகிகளை.. அடையாளம் கண்டு நிஜமாகவே களைந்தால்..
தொட்டுவிடலாம்..

 

click me!