
வரும் 31ம் தேதி ரஜினி என்ன சொல்ல போகிறார் என்பது அவருக்கே தெரியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை, இன்று 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார். இன்றைய சந்திப்பில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்க்ல மாவட்ட ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். நாம் மூன்று பேர் காலில்தான் விழா வேண்டும். நமக்கு உயிர் கொடுத்த கடவுள், உடல் கொடுத்து உயிர்பித்த தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலி மட்டுமே விழா வேண்டும் என்றார்.
மற்றபடி பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ அவசியம் இல்லை என்று ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த் அறிவுறுத்தினார்.
முதல் நாள் பேசிய ரஜினி வரும் டிசம்பர் 31 ஆம் தேதி எனது முடிவை அறிவிப்பேன் என திட்டவட்டமாக சொல்லுவேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ டிடிவி மற்றும் ஆளுங்கட்சியினரின் பண பலம் ஆர்கே நகர் தேர்தல் வெற்றியை தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.
மேலும் வரும் 31ம் தேதி ரஜினி என்ன சொல்ல போகிறார் என்பது அவருக்கே தெரியாது என குறிப்பிட்டார்.