எங்கள் தோல்விக்கு இதுதாங்க காரணம்... கண்ணீர் விட்டு கதறும் திமுக தொண்டர்கள்....

 
Published : Dec 28, 2017, 06:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
எங்கள் தோல்விக்கு இதுதாங்க காரணம்... கண்ணீர் விட்டு கதறும் திமுக தொண்டர்கள்....

சுருக்கம்

Behind the reason of DMK Loss the party Victory in RK Nagar

ஒரு சுயேச்சை வேட்பாளர், பத்து பத்தே நாளில் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்த்த யுக்தி, தீயை வேலை செய்து அள்ளிய மெகா வெற்றி... இப்படி விடா முயற்சியில் இரங்கி வெற்றி பெற்ற தினகரன் காசு கொடுத்து வோட்டு வாங்கினார் என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டிவந்தாலும், தினகரனின் செயல்பாடு சிறப்பானது என திமுகவின் முன்னால் நிர்வாகியான அழகிரி போன்ற இடைதேர்தலை சமாளிக்கும் யுக்தியை கையாண்டவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

கடந்த ஆண்டு ஆர்.கே.நகரில், 2016ல் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டபோது, தி.மு.க., பெற்ற ஓட்டுக்களோடு, கூட்டணி கட்சியினருக்கென சுமார் இருபதாயிரம் ஓட்டுக்களும், அ.தி.மு.க., அரசுக்கு எதிரான மன நிலையில் இருக்கும் மக்கள் ஓட்டுக்களும் தி.மு.க., தரப்புக்கு கிடைத்தாலே, எளிதில் கட்சி வெற்றி பெறும் என்றுதான், ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தார் செயல் தலைவர். ஆனால், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஏற்கனவே தி.மு.க., பெற்றிருந்த ஓட்டுக்களிலேயே முப்பதாயிரத்துக்கும் கூடுதலான ஓட்டுக்கள் இம்முறை கிடைக்காமல் போய், தி.மு.க., டிபாசிட் இழந்துள்ளது. இதற்க்கெல்லாம் என்னதான் காரணம்? தினகரனின் பிரச்சாரம் சரியான திசையில் சென்றது என்றால், திமுகவின் பிரச்சாரம் அத்தனையும் தவறாக அமைந்தது. கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தல் போல இல்லாமல், இம்முறை இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டோரின் ஆதரவு திமுகவுக்கு கிடைத்தது. ஆனால், தொடக்கம் முதலே இந்த இடைத் தேர்தலை ஸ்டாலின் முக்கியத்துவத்தோடு அணுகவில்லை  முதல் விஷயம்.

தினகரன் இந்தத் தேர்தலை வாழ்வா சாவா என்றே அணுகினார். செயல் தலைவரின் செயலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா இல்லாத நிலையில், திமுகவின் வெற்றி எளிதானது என்று சாதாரணமாக இருந்துள்ளார். 15 நாட்கள் ஆர்கே நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர் இது குறித்து பேசுகையில் “தினகரனின் ஆளுங்க, காலையில 8 மணிக்கே ஷார்ப்பா வேலையை ஆரம்பிச்சிடுவாங்க. எங்க ஆளுங்க 11 மணிக்கு வருவாங்க. வந்தும், அரை மணி நேரத்துல கிளம்பி போயிடுவாங்க.

அட இதுகூட பரவாயில்ல... மாவட்டச் செயலாளர்கள் அத்தனை பேருக்கும் ஆர்கே நகரில் தான் வேலை. ஆனால், அவங்க வருவாங்க. வந்ததும், முரசொலி போட்டோகிராபரும், ரிப்போர்டரும் வந்துட்டாங்களான்னு பாப்பாங்க. அவங்க வந்ததும் போட்டோ எடுத்துக்கிட்டு, அவங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு 1000 ரூபாய் குடுத்துட்டு போயிடுவாங்க. அதுக்கு அப்புறம், கூட்டம் வந்தாத்தான் பிரச்சாரத்துக்கு போக முடியும். டிடிவி அணியில பிரச்சாரத்துக்கு வந்தவங்க எல்லாருக்கும் ஒரு நாளைக்கு 500 ரூபா குடுத்தாங்க. எங்களுக்கு ஒரு நாளு 300 ரூபா குடுத்தாங்க. மறு நாள் காசு குடுக்க ஆளு இல்ல. காசு வராதுன்னு தெரிஞ்சு பல பேரு பிரச்சாரத்துக்கு வராம தவிர்த்துட்டாங்க என திமுக தொண்டரின் ஆதங்கம்.

இதர திமுக வேட்பாளர்களைப் போல, மருது கணேஷ் வசதியான வேட்பாளர் கிடையாது. அவரால் தனிப்பட்ட முறையில் செலவு செய்ய முடியாது. மற்றவர்களும் செலவு செய்யத் தயாராக இல்லை. தொடர்ந்து.... “கடந்த 7 வருஷமா நாங்க ஆட்சியில இல்லை. இந்த ஏழு வருஷத்துல, ஆர்ப்பாட்டம், போராட்டம், ரெண்டு சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், பேரணி, மாநாடுன்னு நாங்க தொடர்ந்து செலவு பண்ணிக்கிட்டு இருக்கோம். தளபதி வந்தார்னா, குறைஞ்சது ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் 15ல இருந்து 20 லட்ச ரூபாய் வரை செலவாகும். செலவு பண்ணிக்கிட்டுத்தான் இருக்கோம்.

ஒவ்வொரு முறை மாநாடு, பேரணின்னா நாங்கதான் நிதி திரட்டித் தர்றோம். முரசொலி நிதி, முப்பெரும் விழா நிதின்னு வசூல் பண்ணி குடுத்துக்கிட்டே இருக்கோம். தனியா தேர்தல் நிதின்னே இருக்கு. அந்த பணமெல்லாம் எங்க போச்சு? பிரச்சாரத்துக்கு வர்ற மாவட்டச் செயலாளர்கள், அன்னைக்கு பிரச்சாரத்துக்கு வர்றவங்க முழுக்க செலவு பண்ணணும்னு சொன்னா நாங்க எங்க போறது ? இதனால, நான் உட்பட பல மாவட்டச் செயலாளர்கள், ஒரு நாளைக்கு மேல அங்க இல்லாம இடத்தை காலி பண்ணது உண்மைதான். எவ்வளவுதான் சார் நாங்க செலவு பண்றது ?” என்று புலம்பினார்.

எத்தனையோ தேர்தல்களை சந்தித்து நீண்ட அனுபவம் உள்ள ஸ்டாலின், ஆர்கே நகர் தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்தை தராமல் போனது வியப்பான ஒன்றே. சில ஆண்டுகள் முன்னால் ஸ்டாலினோடு நெருக்கமாக பணியாற்றிய ஒருவர் “ஸ்டாலினைப் போல கடுமையான உழைப்பாளியை பார்க்க முடியாது. அவரது நோக்கங்கள் எதுவும் பிழையானது அல்ல. ஆனால், கள நிலைமைகளின் கசப்பான உண்மைகளை அவர் கேட்க மறுக்கிறார். ஆர்கே நகரில் தோற்று விடுவோம் என்ற யதார்த்தம் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு கட்சி நிர்வாகிக்கு தெரிந்திருந்தாலும், அதை அவரால் ஸ்டாலினிடம் வெளிப்படையாக சொல்ல முடியாது. தளபதியோடு இருக்கும் துரைமுருகன், பொன்முடி போன்றோர், அவருக்கு பிடித்தமான, மனதுக்கு இதமான செய்திகளை மட்டுமே அவர் காதுக்கு கொண்டு செல்கிறார்கள். துரைமுருகன், தம்பி, எப்போ தேர்தல் வரும், எப்போ நம்ப கையில மை வைப்பாங்கன்னு வாக்காளர்கள்லாம் திமுகவுக்கு ஓட்டு போடணும்னு விரலை நீட்டிக்கிட்டே தூங்கறாங்க தம்பி என்று கூறுவதை அப்பயே உண்மை என்று ஸ்டாலின் நம்புகிறார்.

செல்வாக்கும் இல்லை, ஓட்டும் இல்லை. தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்குமென்றால், ஜெயலலிதாவைப் போல, தி.மு.க.,வை தனித்தே போட்டியிட்டுருக்கலாம் கூட்டணி என்ற பெயரில் நூறு ஓட்டுக்கு பயனில்லாத காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், மதிமுக என கூட்டமாக வைத்துக்கொண்டு யாரும் களத்தில் இரங்கி வேலை செய்யவே இல்லை.

ஆர்கே நகரில், உண்மையான கள நிலவரத்தை ஸ்டாலின் காதுக்கு கொண்டு சென்றிருக்க மாட்டார்கள். அவரும், மனதுக்கு இதமான கருத்துக்களை கூறுபவர்களையே அவர் அருகில் வைத்திருக்கிறார். உண்மையை சொல்லுங்கள். உண்மையில் என்ன நிலவரம் என்பதை செயல் தல கேட்டறிந்திருந்தால், இந்த படுதோல்வியை தவிர்த்திருக்க முடியும் குமுறுகிறார் அந்த தொண்டர்.

டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக போன்ற ஒரு பெரிய இயக்கம் தோல்வியை சந்தித்தது நல்லதல்ல. ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை தலைமை உணரவில்லை. எப்போதும் வரும் விமர்சனம் ஸ்டாலின் மீது தற்போதும் வைக்கப்படும். தலைவர் கலைஞர் ஆக்டிவ் ஆக இருந்திருந்தால் இப்படி விட்டிருப்பாரா? என்ற விமர்சனம் வரத்தான் செய்யும். நம் எல்லோரையும் விட,  தலைவர் தேர்தல் பிரயத்தனங்களை, முன்னேற்பாடுகளை அருகில் இருந்து பார்த்தவர் செயல் தல. அவர் எப்படி செயல்பட்டிருப்பாரோ? அப்படி செயல்பட்டிருக்க வேண்டாமா!? ஆர்கே நகரில் அவரும் பம்பரமாக சுழன்று, கட்சியினரையும் வேலை வாங்கியிருக்க வேண்டுமா!

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!