ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படுவது உறுதி... தீவிரவாதிகளுக்கு மோடி சபதம்!

By Thiraviaraj RMFirst Published Feb 16, 2019, 5:52 PM IST
Highlights

சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் தீவிரவாத தாக்குதலுக்கு பலியானதற்கு நிச்சயமாக பழிவாங்கியே தீர்ப்போம் என பிரதமர் மோடி சபதம் விடுத்துள்ளார். 
 

சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் தீவிரவாத தாக்குதலுக்கு பலியானதற்கு நிச்சயமாக பழிவாங்கியே தீர்ப்போம் என பிரதமர் மோடி சபதம் விடுத்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ’’புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும். இது மிகவும் துயரமான நேரம். நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அறிவார்த்தமாக சிந்திக்க வேண்டிய நேரம்.

புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும். காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மிக மோசமான ஒரு செயலை செய்து விட்டார்கள். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். உங்களின் கோபம் புரிகிறது. 

நாடு முழுவதுமே கடும் சோகத்தால் மக்கள் ஆழ்ந்துள்ளனர். வீரர்களின் தியாகம் வீண் போகாது. தீவிரவாதிகள் எங்கே பதுங்கி இருந்தாலும் இனிமேல் தப்பிக்க முடியாது. ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறோம். தீவிரவாதிகளின் தலைவிதியை இனிமேல் ராணுவ வீரர்கள் முடிவு செய்வார்கள். தீவிரவாதிகள் இனிமேல் தப்பித்துச் செல்ல முடியாது. அவர்கள் எங்கே ஒளிந்துகொள்ள முயற்சித்தாலும் தண்டிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.

click me!