தமிழகத்தில் கோவில்கள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் சேகர் பாபு தகவல்...!

By vinoth kumarFirst Published Jun 18, 2021, 11:02 AM IST
Highlights

தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிர் கூட பறிபோகாத நிலை வரும்போது கோயில்கள் திறக்கப்படும். பக்தர்கள் வழிபாட்டு அனுமதி வழங்கப்படும்.

கோயிலில் உள்ள நகைகள், ஆபரணங்கள் குறித்த ஆவணங்களை இணையத்தில் வெளியிட முடியாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு;- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு பணிக்காக வந்துள்ளேன். தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிர் கூட பறிபோகாத நிலை வரும்போது கோயில்கள் திறக்கப்படும். பக்தர்கள் வழிபாட்டு அனுமதி வழங்கப்படும். சென்னையில் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. 

கோவில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை. மற்றபடி அனைத்து பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் தடையின்றி நடைபெற்று வருகிறது. கோயிலில் உள்ள நகைகள், ஆபரணங்கள் குறித்த ஆவணங்களை இணையத்தில் வெளியிட முடியாது. பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்பதால் வெளிப்படையாக வெளியிட முடியாது. 

மேலும், மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து நடந்த மண்டபத்தை புனரமைப்பு அமைப்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்சி ஆமை வேகத்தில் நடந்தது; தற்போது நடக்கும் ஆட்சி முயல் வேகத்தில் நடக்கும் என்றார்

click me!