நடிகையை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர்... கைது செய்ய 2 தனிப்படைகள்..!

Published : Jun 18, 2021, 10:35 AM IST
நடிகையை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர்... கைது செய்ய 2 தனிப்படைகள்..!

சுருக்கம்

ஒரு தனிப்படை மதுரை விரைந்துள்ள நிலையில், மற்றொரு தனிப்படை சைபர் கிரைம் போலீசாரிடம் விவரங்கள் சேகரிப்பதாக கூறப்படுகிறது.  

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதாகக் கூறி மணிகண்டன் தன்னை ஏமாற்றியதாக நடிகை சாந்தினி போலீசில் புகார் தெரிவித்து இருந்தார்.

 

 இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின்  கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார்.  முன்ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனால் தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தனிப்படை மதுரை விரைந்துள்ள நிலையில், மற்றொரு தனிப்படை சைபர் கிரைம் போலீசாரிடம் விவரங்கள் சேகரிப்பதாக கூறப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..