கிஷோர் கே. சாமி மீது நடிகை ரோகினி புகார்.. ரகுவரனையும், தம்மையும் இழிவு படுத்தியதாக குற்றச்சாட்டு.

Published : Jun 18, 2021, 10:22 AM IST
கிஷோர் கே. சாமி மீது நடிகை ரோகினி புகார்.. ரகுவரனையும், தம்மையும் இழிவு படுத்தியதாக குற்றச்சாட்டு.

சுருக்கம்

அந்த புகாரில் "கடந்த 2014 ஆம் ஆண்டு  கிஷோர்.கே.சாமி தனது வலைதள பக்கத்தில் தன்னைப் பற்றியும், மறைந்த நடிகரும் தனது கணவருமான ரகுவரன் பற்றியும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார்.  

தன்னை பற்றியும், மறைந்த நடிகர் ரகுவரன் குறித்தும், பாஜக மூத்த தலைவர்கள் குறித்தும் இழிவான கருத்தை பதிவிட்ட கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ரோகினி புகார் அளித்துள்ளார். திரைப்பட நடிகையும், மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியுமான ரோகினி இணையவழியில்  பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அந்த புகாரில் "கடந்த 2014 ஆம் ஆண்டு  கிஷோர்.கே.சாமி தனது வலைதள பக்கத்தில் தன்னைப் பற்றியும், மறைந்த நடிகரும் தனது கணவருமான ரகுவரன் பற்றியும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த தவறான கருத்துகளால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதே போல் பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார்." எனக்கூறி இதனால் கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோகினி குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கெனவே கிஷோர் கே.சாமி முன்னாள் முதல்வர்கள் குறித்தும், பெண் பத்திரிக்கையாளர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னியரசு மற்றும் நடிகை ரோகினி ஆகியோரும் கிஷோர் கே.சாமி மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..