சென்னையில் 13 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1% ஆக குறைந்தது. ஒரே மாதத்தில் நடந்த மேஜிக்.

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2021, 9:54 AM IST
Highlights

கொரோனா தொற்றுப் பரவும் பகுதியில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. 

சென்னையில் 13 மண்டலத்தில் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை  பெறுவோர் எண்ணிக்கை 1% ஆக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி மற்றும் தண்டையார்பேட்டையை தவிர அனைத்து மண்டலங்களிலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1% ஆக உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் கொரோனா தொற்று வேகமாக  குறைந்து வருகிறது. நேற்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னையில் 689 ஆக உள்ளது.கொரோனா தொற்றுப் பரவும் பகுதியில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையிலும் 5 லட்சத்து 27 ஆயிரத்து 283 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 5 லட்சத்து 12 ஆயிரத்து 832 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 6 ஆயிரத்து 531 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 

மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட 7, 920 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலியை தவிர அனைத்து மண்டலங்களிலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக மணலியில் மட்டும் சிகிச்சை பெறுவோர் 2% ஆக உள்ளது. மேலும் சென்னையில் கொரோனா பரவல் விகிதம் மே 2வது வாரத்தில் 27 % இருந்தது தற்போது 2.4% ஆக குறைந்துள்ளது.  மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களில் 97% நபர்கள் குணமடைந்துள்ளனர், 1.50% நபர்களில் 0.50%, இறந்துள்ளனர், 1% நபர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

click me!