பாலியல் தொந்தரவால் மீரா மிதுன் எடுத்த பயங்கர முடிவு. புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

Published : Jun 18, 2021, 09:37 AM IST
பாலியல் தொந்தரவால் மீரா மிதுன் எடுத்த பயங்கர முடிவு. புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

சுருக்கம்

தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக  தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகை மீரா மிதுனிடம் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 

தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக  தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகை மீரா மிதுனிடம் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். 

இவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளத்தில் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் ஒரு அமைப்புக்காக வேலை பார்த்து அதை பிரபலப்படுத்தினேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து விலகினேன். அதை நடத்திய அஜித் ரவி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தேன், அவர் மூலம்
3 வருடங்களாக தொல்லையை அனுபவித்து வருகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.  

மேலும், தற்கொலைதான் எனக்கு இருக்கும் ஒரே முடிவு எனவும் எனது தற்கொலைக்கு அஜித் ரவிதான் முழு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சுஷாந்த் சிங் போன்று நான் இறந்த பிறகு அவரை தண்டிக்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டு தமிழக முதல்வரையும் பிரதமர் மோடியையும் ட்விட்டர் பதிவில் டேக் (tag)செய்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை காவல் துறையின் சமூக வலைதள பக்கம் மூலமாக நடிகை மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டை குறிப்பிட்டு புகார் அளிக்குமாறும், புகாரை பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை