டாஸ்மாக் கடைகள் திறப்பு எப்போது..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jun 5, 2021, 6:00 PM IST
Highlights

ஊரடங்கு நீட்டிப்பை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிறுத்தி இருக்கிறது.   
 

ஊரடங்கு நீட்டிப்பை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிறுத்தி இருக்கிறது.   

தமிழகத்தில் லாக்டவுனில் சில மாவட்டங்களில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகள், சலூன்கள் மற்றும் தேநீர் கடைகளை திறக்க அனுமதீக்கப்படவில்லை. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,000க்கும் அதிகமாக இருந்ததால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்ததால் லாக்டவுன் ஜூன் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கி உள்ளது. கொரோனா மரணங்களும் லேசாக குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய லாக்டவுடன் ஜூன் 14-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றுள்ள 11 மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு அந்த மாவட்டங்களுக்கான தளர்வுகள், இதர மாவட்டங்களுக்கான தளர்வுகள் என பிரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார். பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் பொதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து வெளிப்படையான அறிவிப்புகள் வரவில்லை. இதனால் குடிமகான்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மறு அறிவிப்பு வரும்வரை டாஸ்மாக் மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிறுத்தி இருக்கிறது.   

click me!