அப்பாவியை அலைக்கழித்த நீதிபதி மீது செருப்புவீச்சு... மைலார்டு குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனநிலையை உணர்வாரா.?

Published : Jun 05, 2021, 03:58 PM IST
அப்பாவியை அலைக்கழித்த நீதிபதி மீது செருப்புவீச்சு... மைலார்டு குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனநிலையை உணர்வாரா.?

சுருக்கம்

நீதிபதிகள் உரிய நேரத்தில் தீர்ப்பு வழங்குவதில்லை. குற்றமே செய்யாத ஒருவனை பல காலம் அலைய வைத்து, அவனது உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்து, பால்யகாலம் தொலைத்து, வாழ்க்கை அழியும் தருணம் வரை அந்த தீர்ப்புக்காக காத்திருப்பான் அந்த அப்பாவி. 

சுற்றமும், உறவுகளையும் தாண்டி, தன் உயிருக்கு ஆபத்து வந்த ஆபத்து, அரசியல், அரஜாகம் அனைத்தையும் தாண்டி உச்சபட்சமாக தான் நம்பும் கடவுளையும் தாண்டி, ஒரு சக மனிதனின் கடைசி புகழிடமாக நிற்பது நீதித்துறையை மட்டுமே. நீதிபதிகளின் உத்தரவுக்காக சக குடிமனிதன் நெற்குருகி, ’மைலார்ட்’என நெஞ்சார அழைப்பதுவும் அந்த நீதிபதிகளைத்தான். ஆனால், அப்படிப்பட்ட நீதிபதிகள் உரிய நேரத்தில் தீர்ப்பு வழங்குவதில்லை. குற்றமே செய்யாத ஒருவனை பல காலம் அலைய வைத்து, அவனது உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்து, பால்யகாலம் தொலைத்து, வாழ்க்கை அழியும் தருணம் வரை அந்த தீர்ப்புக்காக காத்திருப்பான் அந்த அப்பாவி. 

தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும். தவறிழைக்காதவன் ஒருபோதும் தண்டிக்கப்படக்கூடாது என நீதிமான்கள் பேசுவார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகள் சில நேரங்களில் தப்பி விடுவார்கள். தவறிழைக்காதாவர் சட்டத்தின் பிடியில் மாட்டிக்க்கொண்டு வாழ்க்கையை தொலைக்கக்கூடும். தாமதமாக கிடைக்கக்கூடிய நீதியும், குற்றம்சாட்டப்பட்ட நபரை படுகுழியில் தள்ளும். குற்றமே செய்யப்படாத அவர் இந்த் அநீதிகளால் வெறுப்பாகி, தன்னை அறியாமல் உணர்ச்சி வயப்படக்கூடும். அப்படி ஒரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

இப்போது அந்த செய்திக்கு வருவோம்.  குஜராத் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி மீது செருப்பை வீசியவருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து அகமதாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதியான கே.எஸ்.ஜாவேரி ஒரு வழக்கை விசாரித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது யாரும் எதிர்பாராவிதமாக ஒருவர் அவர் மீது இரண்டு செருப்புகளை அடுத்தடுத்து வீசினார். நல்வாய்ப்பாக அந்தச் செருப்புகள் நீதிபதியின் மீது படவில்லை.

அங்கிருந்த காவலர்கள் செருப்பை எறிந்தவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் ஏன் செருப்பை வீசினீர்கள் என விசாரிக்கப்பட்டது. அதற்கு அவர் அதிர்ச்சியளிக்கும் விதமான காரணத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் ராஜ்கோட் மாவட்டம், பாயாவதர் பகுதியைச் சேர்ந்த டீக்கடைக்காரர் பவானிதாஸ் பாவாஜி என்றும், தனது வழக்கு நீண்ட நாட்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும், அதனால்தான் விரக்தியில் நீதிபதி மீது செருப்பை வீசியதாகவும் ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து அகமதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் இறுதி விசாரணை தற்போது முடிவடைந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட டீக்கடை உரிமையாளர் பாவாஜிக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்படுவாதக நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், பாவாஜியின் ஏழ்மை கருதி அவருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. 
இப்போது மேற்கண்டவாறு நாம் சுட்டிக்காடியதை பாருங்கள். இப்போது, அவரது வாழ்க்கையை பாழாக்கியதில் நீதிபதியும் ஒருவராகவே கருதப்படுவார்.
 

PREV
click me!

Recommended Stories

கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல்..! சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசு..! களத்தில் இறங்கிய அதிமுக..!