+2 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி... தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட செய்தி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 5, 2021, 2:57 PM IST
Highlights

+2 பொதுத்தேர்வு தொடர்பாக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள், மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினர். 

தமிழகத்தில் மாநில பாடத்தின் கீழ் படிக்கும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. +2 பொதுத்தேர்வு தொடர்பாக ஏற்கனவே ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்ட நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வி அலுவலர்கள், கல்வியாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். 

+2 பொதுத்தேர்வு தொடர்பாக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள், மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினர்.  இன்று சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 13 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ், அதிமுக, திமுக, விசிக, மமக, கொ.ம.தே.க. மதிமுக, த.வா.க. ஆகிய கட்சிகள் 12ம் வகுப்பு தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்ததாகவும், பாமக, கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் கூறியதாவது: கட்சி பிரதிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளதாகவும், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் +2 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு செப்டம்பரில் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!