மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது.. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மோடிக்கு கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Jun 5, 2021, 1:35 PM IST
Highlights

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கான தகவலை தமிழக அரசு செய்தி குறிப்பாக வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவமனைக்காக  தலைவர் மற்றும் செயல் இயக்குனர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கு அண்ணா பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 

இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளை செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் எழுதியுள்ளார் என தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தற்போது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2020இல் அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான கட்டட பணிகள் துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது, ஆனால் 2019ஆம் ஆண்டே அடிக்கல் நாட்டப்பட்டு இதுவரை இரண்டு ஆண்டுகளாகியும், இன்னும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவில்லை என்றும்,  மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் இன்னும் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையே நீடிக்கிறது என்பதும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. 

இந்த தகவல் வெளியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது இந் நிலையில் தமிழக முதலமைச்சர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!