தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்..!

By vinoth kumarFirst Published Oct 19, 2020, 10:23 AM IST
Highlights

முதல் முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அரசு சார்பில் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

முதல் முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அரசு சார்பில் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நீட் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர் தான் முதலிடம் பெற்றுள்ளார். 12 ஆண்டு காலத்துக்கு பிறகு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்து தான் நீட் தேர்வில் 180 கேள்விகளில் 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், இ-பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி அளிக்கும். 2-ம் முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் மூலம் பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

மேலும், மருத்துவ படிப்பிற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்ற முறையில், அரசு பள்ளி  மாணவர்களுக்காக சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைத்தால் 300 மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள். பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை. மேலும் பள்ளிகள் திறப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.

click me!