திரையரங்குகள் திறப்பது எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்..!

By vinoth kumarFirst Published Oct 28, 2020, 12:55 PM IST
Highlights

கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி வழியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, அவர் பேசுகையில்;- கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எதிர்க்கட்சிகள் ஒப்பிட்ட பிற மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கோவிட் சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து தேவைகளை பூர்த்தி செய்ய அறிவுறுத்த வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் மலைப்பாகங்கான மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய தார்ப்பாய்களை வைத்திருக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 

பருவ மழைக்காலத்தில் அவசர கால முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். திரையரங்குகளை திறப்பது பற்றி ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள் குழு தரும் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பண்டிகை காலத்தில் கொரோனா பாதிப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

click me!