திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இப்படி நடக்குது.. போட்டு தாக்கும் எல்.முருகன்.!

Published : Jun 18, 2022, 07:15 AM IST
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இப்படி நடக்குது.. போட்டு தாக்கும் எல்.முருகன்.!

சுருக்கம்

தமிழக ஆளுநர் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட சில அரசியல் கட்சியினர் விளம்பரத்துக்காக பேசி வருகிறார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட சில அரசியல் கட்சியினர் விளம்பரத்துக்காக பேசி வருகிறார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கே.பி.இராமலிங்கம் இல்லத் திருமண விழா

சேலத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.இராமலிங்கம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய பாஜக அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த வகையில் 8 ஆண்டில் எண்ணற்ற சாதனைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 70 ஆண்டு காலம் காங்கிரஸ் செய்யாததை 8 ஆண்டுகளில் பாரதிய ஜனதா அரசு செய்து முடித்துள்ளது. வீடு தோறும் கழிவறை வசதி, சுகாதாரமான குடிநீர் திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு, விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி, உணவு பாதுகாப்பு சட்டம், சிறு நகரங்களில் விமான நிலையம், கடல்பாசி ஆராய்ச்சி மையம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக 

திமுக அரசு குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவதாகவும் மானிய விலையில் டீசல் வழங்குவதாகவும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்வதாகவும் வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்தது. ஆனால், திமுக அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சட்டம்-ஒழுங்கு மோசம்

திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகும். அதேபோல் தற்போது மோசமான நிலையில் உள்ளது. பிரதமர் மோடி ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனால் வேலை இல்லாத இளைஞர்கள் பயன்பெறுவார்கள். தமிழக ஆளுநர் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட சில அரசியல் கட்சியினர் விளம்பரத்துக்காக பேசி வருகிறார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?