Congress: ராஜேந்திர பாலாஜி குற்றவாளி இல்லாத போது எதுக்கு இப்படி ஓடி ஒளியனும்.. திருநாவுக்கரசர் விளாசல்..!

Published : Dec 27, 2021, 07:31 AM IST
Congress: ராஜேந்திர பாலாஜி குற்றவாளி இல்லாத போது எதுக்கு இப்படி ஓடி ஒளியனும்.. திருநாவுக்கரசர் விளாசல்..!

சுருக்கம்

யார் வேண்டுமானாலும் பிரதமராக வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடலாம். ஆனால், பாஜகவுக்கு மாற்று இந்தியாவில் காங்கிரஸ் மட்டுமே. அதேபோல் நரேந்திர மோடிக்கு மாற்றாக அடுத்த பிரதமர் யார் என்றால் கண்டிப்பாக அது ராகுல்காந்தி தான். இந்தியாவில் தற்போதைய நிலையில், பாஜகவுக்கு மாற்று எது என்று கேட்டால், மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மிகபெரிய கட்சியாக இருப்பது காங்கிரஸ் கட்சி ஒன்று தான்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் சரணடைந்து பின் ஜாமீன் பெற்று தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று, கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திருச்சி மாநகரை பொறுத்தவரை பாதியில் நிற்கும் அரிஸ்டோ பாலம் கட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் அரசாணை வெளியிடப்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு பணி விரைவில் துவங்கும். விமான நிலையம் விரிவாக்கம் செய்ய 350 ஏக்கருக்கு மேல் பாதுகாப்புத்துறை நிலம் வவேண்டும்.

அதுகுறித்தும் ராணுவ அமைச்சரை சந்தித்து பேசி உள்ளேன். கடிதம் அனுப்பி உள்ளேன். நாடாளுமன்றத்திலும்  வலியுறுத்தி உள்ளேன். தமிழக அரசு நிலம் வழங்க வேண்டியுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ பொய்யா மொழி, மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் நில ஆர்ஜிதம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பேசிய அவர் யார் வேண்டுமானாலும் பிரதமராக வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடலாம். ஆனால், பாஜகவுக்கு மாற்று இந்தியாவில் காங்கிரஸ் மட்டுமே. அதேபோல் நரேந்திர மோடிக்கு மாற்றாக அடுத்த பிரதமர் யார் என்றால் கண்டிப்பாக அது ராகுல்காந்தி தான். இந்தியாவில் தற்போதைய நிலையில், பாஜகவுக்கு மாற்று எது என்று கேட்டால், மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மிகபெரிய கட்சியாக இருப்பது காங்கிரஸ் கட்சி ஒன்று தான்.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றவாளி இல்லை என்றால் ஏன் ஓடி ஒளிய வேண்டும். நிரபராதி என்றால் நீதிமன்றத்தில் சரணடைந்து நிரபராதி என்று நிரூபித்து வெளியே வரலாம் என  காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஊராட்சி செயலாளர் பணியிலும் மோசடி..! திமுக அரசில் ஊழல் நடைபெறாத துறையே இல்லை..! அண்ணாமலை ஆவேசம்..!
எம்ஜிஆர், ஜெ. காலத்தில் இருந்த வரவேற்பு.. TVKவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. செங்கோட்டையன் ஓபன் டாக்