DMK: ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் வேலுமணி சிறை செல்வது உறுதி.. அதிமுக கோட்டையில் கெத்து காட்டிய உதயநிதி.!

By vinoth kumarFirst Published Dec 27, 2021, 6:38 AM IST
Highlights

கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயம்புத்தூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்ட முழுவதும் பிரச்சாரம் செய்தேன். எப்படியும் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் 10 தொகுதியில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை. 

துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்கு ஆசைப்படவில்லை என்று எம்.எல்.ஏ.வும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் காளப்பட்டியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். இந்த முகாமை தொடங்கி வைத்து பேசிய உதயநிதி;- துணை முதல்வர் அல்லது அமைச்சர் பொறுப்புகளுக்கு என்னை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பேசியுள்ளனர். ஆனால், எனக்கு அந்த பொறுப்புகளின் மீது எந்த வித ஆசையும் இல்லை. அந்த பொறுப்புகளுக்கு ஆசைப்படாதவன் நான் என்று பேசினார்.

கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயம்புத்தூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்ட முழுவதும் பிரச்சாரம் செய்தேன். எப்படியும் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் 10 தொகுதியில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை. தமிழ்நாடு முழுக்க ஜெயித்தோம். கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏமாற்றி விடாதீர்கள்.

கடந்த ஆட்சியில் வேலுமணி போன்றவர்கள் அடித்த பணத்தை கொடுத்து, சட்டமன்றத்தில் வெற்றி பெற்றனர். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். அதன்படி  விரைவில் வேலுமணி உள்ளே செல்வது உறுதி. தோல்விக்கு நம்மிடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம். கழகத்தில் எதிராக வேலை பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழக முதல்வர் பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்று கோவையில் அதிகம் இருந்தது. ஆட்சிக்கு வந்த முதல் 2 மாதங்கள் கரோனாவை எதிர்த்து போராட வேண்டி இருந்தது. தற்போது ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அதேசமயம், தமிழக மக்களை பாதுகாக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழக முதல்வர் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!