DMK - NTK issue : அவுங்க பாசிச திமுக.. சீமானுக்கு நாங்க உறுதுணை... அதகளப்படுத்தும் அர்ஜூன் சம்பத்.!

By Asianet TamilFirst Published Dec 26, 2021, 10:25 PM IST
Highlights

கோவை மண்டலத்தில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம். அதனால்,  உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜியை திமுக  களமிறக்கி விட்டிருக்கிறது.

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் திமுகவுக்குக் கிடையாது என்பதுதான் உண்மை என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தை ஒன்று அன்று பொங்கல் பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனேஉ தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். திமுக ஆட்சியில் தை 1- ஆம் தேதியைத் தமிழ்ப் புத்தாண்டு என ஏற்கெனவே அறிவித்தார்கள். மீண்டும் அதிமுகக்கு வந்த பிறகு சித்திரை 1- ஆம் தேதியைத் தமிழ் புத்தாண்டாக அதிமுக அரசு அறிவித்தது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தை 1- ஆம் தேதியைத் தமிழ்ப் புத்தாண்டாக  மாற்ற முயற்சி செய்கிறார்கள். 

நம்முடைய பாரம்பரியப்படி சித்திரை மாதம்தான் தமிழ்புத்தாண்டு கொண்டாடப்படும். எனவே, மீண்டும் இதை மாற்ற வேண்டாம். ஒமைக்ரான் வைரஸைக் காரணம் காட்டி இந்து பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகை எனச் சொல்லாமல் அரையாண்டு விடுமுறை என்ற பெயரில் விடுமுறையை அறிவித்துள்ளார்கள். திமுக தலைவராக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல தேவையில்லை. ஆனால், தமிழக முதல்வராக நிச்சயமாக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகிறார். அவருடைய வருகையைத் தமிழக வளர்ச்சிக்கு அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் திமுகவுக்குக் கிடையாது என்பதுதான் உண்மை. கோவை மண்டலத்தில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம். அதனால்,  உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜியை திமுக  களமிறக்கி விட்டிருக்கிறது. பாசிச திமுக தொடர்பாக நாம் தமிழர் கட்சி முதலில் உணர வேண்டும். இந்த விஷயத்தில் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள்  உறுதுணையாக இருப்போம்.” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
 

click me!