மூன்று காலி எம்.பி.களுக்கான இடைத்தேர்தல் எப்போ.? தேர்தல் ஆணையத்துக்கு ஞாபகப்படுத்திய டி.ஆர்.பாலு.!

By Asianet TamilFirst Published Jul 29, 2021, 9:30 PM IST
Highlights

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் திமுக மீண்டும் மனு அளித்துள்ளது. 
 

தமிழகத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக மக்களவை எம்.பி.க்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமை தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே மனு அளித்தார். 3 இடங்களுக்கும் தனித்தனியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் திமுக குறிப்பிட்டிருந்தது. ஆனால், திமுக மனு அளித்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் இன்னும் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சென்ற முறை தேர்தல் ஆணையத்திடம் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தோம். தற்போது திமுக தலைவர் உத்தரவின் பேரில் நினைவூட்டல் மனுவை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளோம். அதனால் மிக விரைவிலேயே தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது” என டி.ஆர்.பாலு தெரிவித்தார். 

click me!