வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதீங்க.. குளறுபடிகளை சரிசெய்தால் பழிவாங்கும் நடவடிக்கையா? அமைச்சர் ராஜகண்ணப்பன்.!

By vinoth kumarFirst Published Jul 29, 2021, 8:55 PM IST
Highlights

கொரோனா தொற்று குறைந்த பின்னர் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேசுவோம். தொழிலாளர் பிரச்சனையில் பின்வாங்க மாட்டோம். நியாயமான முறையில் நடந்து கொள்வோம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று குறைந்த பின்னர் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேசுவோம். தொழிலாளர் பிரச்சனையில் பின்வாங்க மாட்டோம். நியாயமான முறையில் நடந்து கொள்வோம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்;- உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான். அதுபோன்று தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகளையும், குளறுபடிகளையும் சரிசெய்வது காலத்தின் கட்டாயமாகும். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல. 

கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்வதே முதல்வர் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களின் வேலையாக உள்ளது. அனைத்து பிரச்சனைகளிலும் தமிழக முதல்வர் நிதானமாகச் செயல்படுகிறார். அதனால், இந்த ஆட்சியில் நியாயத்தை எதிர்பார்க்கலாம். இது தொழிலாளர்களுக்கான அரசு. கொரோனா தொற்று குறைந்த பின்னர் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேசுவோம். தொழிலாளர் பிரச்சனையில் பின்வாங்க மாட்டோம். நியாயமான முறையில் நடந்து கொள்வோம்.  

மேலும், புதியதாக 2,200 பேருந்துகளை வாங்க ஜெர்மனியிடம் கடனுதவி பெற்றுள்ளோம். பெண்களுக்கான இலவசப் பயணத்திட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

click me!