தமிழகத்தில் தேர்தல் எப்போது.. இன்று மாலை 4:30 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது.. அரசியல் கட்சிகள் திக் திக்..

By Ezhilarasan BabuFirst Published Feb 26, 2021, 12:39 PM IST
Highlights

அதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமையும் ஐந்து மாநில  தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் அரோரா ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் ஆணைய கூட்டத்தில் ஐந்து மாநில தேர்தல் தேதி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தமிழகம், புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்  தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என  தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகம்,  கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம்,  அசாம், ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா துணை ஆணையர்கள் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் கூட்டம் கடந்த23ஆம் தேதி நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமையும் ஐந்து மாநில  தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் அரோரா ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் ஆணைய கூட்டத்தில் ஐந்து மாநில தேர்தல் தேதி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து மாலை 4: 30  மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் அட்டவணையை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஐந்து மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு  செய்தனர். 

தமிழகத்தில் கடந்த 10 11-ம் தேதி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு துணை ராணுவப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  முன்னதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நடத்திய ஆலோசனையில் தேர்தல் முன்னேற்பாடுகள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகளில் செய்யப்படவேண்டிய தேவையான வசதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அரோரா ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!