புறக்கணித்த மு.க.ஸ்டாலின்... குமுறும் காங்கிரஸ் தலைவர்கள்..!

Published : Feb 26, 2021, 11:54 AM IST
புறக்கணித்த மு.க.ஸ்டாலின்... குமுறும் காங்கிரஸ் தலைவர்கள்..!

சுருக்கம்

அண்ணா அறிவாலயத்தில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. துரைமுருகன் தலைமையிலான குழுவுடன் இந்தப்பேச்சுவார்த்தை நடந்தது.  

அண்ணா அறிவாலயத்தில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. துரைமுருகன் தலைமையிலான குழுவுடன் இந்தப்பேச்சுவார்த்தை நடந்தது.

’முதல் கோணல் முற்றும் கோணல்’என்று சொல்வார்களே அந்த லட்சணத்தில்தான் நடந்திருக்கிறது திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடகாவின் தினேஷ் குண்டுராவ், தமிழக தலைவர் அழகிரி போன்றோர் பங்குபெற்றனர். நியாயப்படி இதில் கலந்துகொள்ள வேண்டிய திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலினின் இந்த புறக்கணிப்பு, சீட்டு விஷயத்தில் திமுக என்ன மனநிலையில் இருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளதாக காங்கிரசார் குமுறுகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ‘குனியக் குனிய குட்டத்தான் செய்வார்கள். கூட்டணி வேண்டாமென துணிந்து முடிவெடுங்கள்’என சத்தியமூர்த்தி பவனுக்கு கதர்ச்சட்டைகள் போன் போட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!