அடிதூள்... இல்லத்தரசிகளின் ஓட்டை மொத்தமாக அள்ளப்போகும் எடப்பாடியார்.. மற்றொரு ஸ்பெஷல் அறிவிப்பும் வெளியீடு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 26, 2021, 11:58 AM IST
அடிதூள்... இல்லத்தரசிகளின் ஓட்டை மொத்தமாக அள்ளப்போகும் எடப்பாடியார்.. மற்றொரு ஸ்பெஷல் அறிவிப்பும் வெளியீடு...!

சுருக்கம்

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவசாயிகள், மகளிரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் தேதியை இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ அறிவிக்க உள்ளார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சார பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார். 16.43 லட்சம் விவசாயிகளின் நிலுவை தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேபோல் 24 மணி நேரமும் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அதிரடி உத்தரவும் விவசாயிகள் மத்தியில் அதிமுக மீதான ஆதரவை அதிகரித்துள்ளது. 


தேர்தல் நேரத்தில் பெண்களின் வாக்குகளை கவரும் விதமாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகின. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய கடனை, தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்களுக்கு எவ்வளவு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்களை கூட்டுறவுத்துறை சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவசாயிகள், மகளிரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், கூட்டுறவு வங்கியில் மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பயிர் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியான போதே நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், 6 சவரன் வரை நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய பெருமக்கள் வாழ்வை இன்பமயமாக்கியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!