திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் சாமிநாதன் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்..!

By vinoth kumarFirst Published Jul 14, 2021, 5:22 PM IST
Highlights

 ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் கருத்து தெரிவிப்பார் என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியதை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டது. பின்னர், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று குறைந்தது. இதைத்தொடர்ந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா 2-வது அலை தொடங்கியதும் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டது.

இந்நிலையில், சென்னை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திரையரங்குகள் திறப்பு குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது. தமிழக முதல்வர், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைத்துள்ளார். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று, பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய கோரிக்கைகளை ஏற்று, ஆழ்ந்து பரிசீலித்துதான் முடிவெடுக்க வேண்டும்.

நாம் எடுக்கக்கூடிய முடிவால் மீண்டும் கொரோனா தொற்று பரவிவிடாத சூழலில்தான் திரையரங்குகளைத் திறக்க முடியும் என்றார். ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

click me!