பள்ளிகள் திறப்பு எப்போது? முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..!

By vinoth kumarFirst Published Jul 6, 2021, 11:50 AM IST
Highlights

தமிழக முதல்வரின் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின் மூன்றாம் கட்ட அலை பரவும் என எதிர்பார்க்கக் கூடிய நிலையில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஏற்ற சூழல் இருக்கும் போது பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 9 முதல் 12ம் வகுப்பு வரை மட்டும் கொரோனா தொற்று குறைந்து இருந்த கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மற்றும் ஜனவரில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கொரோனா 2து அலை ஜெட் வேகத்தில் பரவியதையடுத்து பள்ளிகள், கல்லூரிகளும் மீண்டும் மூடப்பட்டன, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடந்தன. கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வழியாகவே தேர்வுகளும் நடந்தன. இந்நிலையில் கொரோனா 2வது அலை ஓய்ந்து வரும் நிலையில் ஆகஸ்ட் முதல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவிலலை.

இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழக முதல்வரின் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின் மூன்றாம் கட்ட அலை பரவும் என எதிர்பார்க்கக் கூடிய நிலையில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படும் போது பெற்றோர்கள் அச்சம் தவிர்த்து தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும். எனினும் மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என்ற கருத்துக்களே அதிகம் வருகிறது, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வரின் முடிவுகளின் படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

click me!