ஜெயலலிதாவை முதன்முதலில் சந்தித்தது எப்போது? சசிகலா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 18, 2021, 11:00 AM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது சர்ச்சையானது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட  வீடியோ கேசட்டில்  பின்னணி இசை சேர்க்க என் வீட்டிற்கு  அனுப்பி வைத்திருந்தார். அப்போது,  இந்த கேசட்டை பெரிய தொகை கொடுத்து வாங்கிக்கொள்ள திமுகவிடம் என்னிடம்  தொலைபேசியில் என்னிடம் பேசினர். 

உலகத் தமிழ் மாநாட்டில்தான் ஜெயலலிதாவைப் முதன்முதலில் பார்த்தேன் என பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு சசிகலா தகவல் தெரிவித்துள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வெளியே வந்த சசிகலா திடீரென அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதனையடுத்து, சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ தினசரி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், சசிகலா என்னும் நான் என்ற தலைப்பில் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ஜெயலலிதாவை முதலில் சந்தித்தது எப்போது உள்ளிட்ட சுவாஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.  உலகத் தமிழ் மாநாட்டில்தான் ஜெயலலிதாவைப் முதன்முதலில் பார்த்தேன். அப்போது வேறு யாரும் சென்னையில் வீடியோ கவரேஜ் செய்யவில்லை. நாங்கள்தான் 200 டிவி வைத்து கொண்டு வீடியோ கவரேஜ் முதன்முதலில் செய்து கொண்டிருந்தோம். இந்த சமயத்தில் பல்வேறு மாவட்டங்களில் வீடியோ பதிவு செய்யும் பணியை அதிமுக எங்களுக்கு வழங்கியது.

ஜெயலலிதா, ஏற்கனவே சினிமா பின்னணியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எங்களுடைய வீடியோ பதிவு செய்யும் முறை பிடித்திருந்தது. அப்போது கட்சியிலிருந்த துரை என்பவர் வீட்டிற்கே வந்து, ஜெயலலிதாவின் வீடியோவைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டார். அப்போது தெற்கு ஆற்காடு ஆட்சியராக சந்திரலேகா மிகவும் நெருங்கிய நண்பர். ஜெயலலிதாவும் ஒருமுறை இணைந்து எங்கள் நிறுவனம் எடுத்த வீடியோவைப் பார்த்துள்ளனர். அப்போது, சந்திரலேகா, வீடியோ பதிவு செய்தவர் என்னுடைய நண்பர்தான் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது சர்ச்சையானது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட  வீடியோ கேசட்டில்  பின்னணி இசை சேர்க்க என் வீட்டிற்கு  அனுப்பி வைத்திருந்தார். அப்போது,  இந்த கேசட்டை பெரிய தொகை கொடுத்து வாங்கிக்கொள்ள திமுகவிடம் என்னிடம்  தொலைபேசியில் என்னிடம் பேசினர். உடனே நான் துரைமூலம்  இந்த கேசட்டை ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டேன். இதைத்தான் தேடிக்கொண்டிருப்பதாகவும், தலைவரும் எம்ஜிஆரும் அதை கேட்டதாகவும்  துரையிடம் ஜெயலலிதா கூறியிருக்கிறார். 

இந்த சம்பவத்தை அடுத்து ஜெயலலிதா என்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ஒருநாள் மாலை 3 மணிக்கு எனக்கு கார் அனுப்பி என்னை வீட்டிற்கு அழைத்தார். அன்று தான் அவரை சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.

click me!