நாசர் எப்போ தமிழ்நாடு DGP ஆனாரு? இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ? கலாய்க்கும் ஜெயக்குமார்..!

Published : Aug 12, 2021, 04:35 PM IST
நாசர் எப்போ தமிழ்நாடு DGP ஆனாரு? இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ? கலாய்க்கும் ஜெயக்குமார்..!

சுருக்கம்

வேலுமணியை அடுத்து ஜெயக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படும் என அமைச்சர் நாசர் கூறியதற்கு அவரு எப்போது தமிழ்நாடு டிஜிபி ஆனார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலுமணியை அடுத்து ஜெயக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படும் என அமைச்சர் நாசர் கூறியதற்கு அவரு எப்போது தமிழ்நாடு டிஜிபி ஆனார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தினர். இதில், நெருங்கிய நண்பர்களுக்கே கோடிக்கணக்கில் அரசின் டெண்டர்கள் விடப்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சோதனை அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஜெயக்குமார் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சனம் செய்திருந்தனர்.

இதுதொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறுகையில்;-  முன்னாள் அமைச்சர் வேலுமணியை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படும். அவர்கள் மீது தவறு இல்லை என்றால் அதை நிரூபித்துவிட்டு வெளியே வரட்டும். அவர்கள், முறைகேடாக பல்லாயிரம் கோடி சேர்ந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள் பதறுகின்றனர் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் நாசருக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நாசர் எப்போ தமிழ்நாடு DGPஆனாரு?.. இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ? #திமுக அமைச்சர்கள் 22 பேர் மேல லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்கு நிலுவையில் இருக்கே.. அதுக்கு எப்போ ஆக்ஷன் எடுப்பீங்க நாசர் சார்..? வேணும்னா சொல்லுங்க அந்த பட்டியல நான் தரேன். DVAC-ஐ முடுக்கி விடுங்க.. என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!