நாராயணசாமிக்கு என்ன ஆச்சு..? தேர்தலில் போட்டியிடுவாரா, தவிர்ப்பாரா..? இது புதுச்சேரி பரபர..!

By Asianet TamilFirst Published Mar 17, 2021, 9:08 AM IST
Highlights

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு அக்கட்சியைச் சேர்ந்த பலர் என்.ஆர். காங்கிரஸ், பாஜகவுக்கு தாவிவிட்டனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைத்து மீண்டும் போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது சிபிஐ, விசிக தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. எஞ்சிய 13 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.


புதுச்சேரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் எதுவுமே முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் பெயர் இடம் பெறவில்லை. இன்னும் ஏனாம் தொகுதிக்கு மட்டுமே வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஏனாம் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார். எனவே, அந்தத் தொகுதியில் நாராயணசாமி போட்டியிடுவாரா அல்லது தேர்தலில் போட்டியிடாமல்  தவிர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2016-இல் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு நாராயணசாமி வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் இத்தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!