
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. இதேபோல புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கட்சிகள் இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்ப்பட்டது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதிமுக 5 தொகுதிகளிலும் பாஜக 9 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
எனவே, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பாமக, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக முன்பே அறிவித்தது. ஆனால், பாமகவை தக்க வைத்துக்கொள்ள பாஜக பல வழிகளில் முயன்றது. தேர்தலில் ஒரு தொகுதிகூட ஒதுக்காத நிலையில், அதிருப்தி அடைந்த பாமக, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களையும் அக்கட்சி அறிவித்துள்ளது.