
கடந்த சில நாட்களாக திவாகரனும் அவருடைய மகனும் தினகரனை எதிர்த்து அரசியல் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். இந்த திடீர் முடிவுக்குப் பின்னணியில் இருப்பது ஆளுங்கட்சியில் உள்ள சிலர்தான் என்றும் தினகரன் நினைக்கிறார். பழனிச்சாமி அணியில் உள்ள சிலர்தான் திவாகரனைத் உசுப்பேற்றி விட்டு, தினகரனுக்கு எதிராகச் செயல்பட வைப்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்களாம்.
ஆமாம், என்னதான் சசிகலாவை எதிர்த்து தினகரனை எதிர்த்து இன்னமும் தேர்தல் ஆணையத்தில் ஒருபக்கம் வாதாடிக் கொண்டிருந்தாலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் தன்னை ஆளாக்கிய ராவணன் மீது மட்டும் நன்றியுணர்வை இன்னும் மறக்கவில்லை. இதற்க்கு உதாரணம் சொல்லனும்னா கடந்த நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தைக் குறிவைத்து மத்திய அரசு நடத்திய மெகா ரெய்டில் தப்பித்தது ராவணன் மட்டும்தான். அப்போதே இது ராவணன் மீதுள்ள நன்றி விசுவாசம் தான் காரணம் என சொல்லப்பட்டது.
2011 சமயத்தில் ராவணன்தான் கொங்கு மண்டல அதிகார மையமாக் இருந்தார். அந்த சமயத்தில் தினகரன் கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஓரங்கட்டப்பட்டிருந்தார். இந்த நிலையில் இப்போது தினகரன் அதிமுகவின் தலைமைக்கு வருவதில் ராவணனுக்கு செம்ம கடுப்பு. இந்த விஷயம் எடப்படிக்கு நல்லாவே தெரியும், இதனால் ராவணனுடன் சில மாதங்களாகவே பேசிவந்த எடப்படியின் ஆதரவு அமைச்சர்கள் முக்கிய வேண்டுகோளை அவர் வைத்தார்களாம்.
அப்போது, ‘பொதுச் செயலாளராக சின்னம்மாவே இருக்கட்டும். எடப்பாடி அண்ணன் முதலமைச்சராகத் தொடரட்டும், சின்னம்மா வெளியே வந்த பிறகு ஆட்சியையும் கட்சியையும் முழுதாக ஒப்படைத்துவிடுகிறோம். இந்த தகவலை திவாகரனிடம் சொல்லுங்கள். இதற்காக தினகரனை நீங்களும் கழட்டி விட்டுவிடச் சொல்லுங்கள் இதுமட்டும் நடந்தால் போதும் என ராவணனிடம் இப்படி ஒரு டீல் பேசியிருக்கிறார்கள்.
இந்த டீல் பேசி சில நாட்களுக்கு பின் திவாகரனிடம் தெரிவித்திருக்கிறார் ராவணன். அப்போது, தனது மகன் ஜெய் ஆனந்துக்கு எந்தப் பொறுப்பும் தராமல் தொடர்ந்து தட்டிக்கழிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார் என்பதில்தான் வருத்தம் இருந்த நேரத்தில் இந்த டீல் விஷயம் காதுக்கு வரவே, ‘நல்ல திட்டம்தான். தினகரனை எதிர்க்க தயாரானார்கள்.
ஆமாம் எதற்காக இந்த குடும்பத்தில் இப்படி ஒரு சண்டையை மூட்டி விட்டுள்ளார்? இன்னும் சில நாள்களில் 18 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களின் வழக்கில் தீர்ப்பு வந்துவிடும், எப்படியும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குச் சிக்கலை உண்டாக்கும் என்பதால், 'இந்த ஆட்சிக்கு எந்தவிதச் சிக்கலும் வரக் கூடாது. 'மன்னார்குடி குடும்பத்தின் தொழில்களுக்கு எந்தவிதச் சிக்கல்களும் வந்துவிடக் கூடாது' என்ற ஒரே ஒரு டீல் பேசி எடப்பாடியையோடு கைகோர்க்க ரெடியானார் திவாகரன். முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் தினகரன் இருக்க மாட்டார் என்பதே எடப்பாடி பழனிசாமியின் திட்டம். திவாகரன் எப்போதுமே தனது மாமாவைப் போல (நடராசன்) நிழல் அரசியலையே விரும்புபவர். கள அரசியலுக்கு அவர் வர விரும்பாதவர். அதனால், திவாகரன் மூலம் தினகருக்கு இப்படி ஒரு நெருக்கடியை கொடுத்திருக்கிறார்.