அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் உங்களுக்கு என்ன வேலை? ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை.!

Published : Jun 08, 2022, 12:07 PM IST
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் உங்களுக்கு என்ன வேலை?  ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை.!

சுருக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்ய இன்று காலை சென்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றனர்.

ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் இந்த திமுக அரசு செய்யும் காரியங்களைக் கண்டு தமிழக பாஜக அமைதியாக இருக்காது என அண்ணாமலை கூறியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்ய இன்று காலை சென்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றனர்.

இது குறித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் நீதி, மனுநீதி, மனுதர்மம். எனவே தீட்சிதர்கள் ஆய்வுக்கு வரும் குழுவினருக்கு சட்டத்தின்படி அவர்கள் கேட்கிற விளக்கங்களை அளிப்பதுதான் சட்டத்தின்படி உகந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.  இந்நிலையில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மே 23ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை @arivalayam அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள். கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலை முற்றுகையிட்டுள்ளது இந்து சமய அறநிலையத் துறை.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை? தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் இந்த @arivalayam அரசு செய்யும் காரியங்களைக் கண்டு @BJP4TamilNadu அமைதியாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!