குமாரசாமி போயாச்சி... பாஜகவுக்கும் மெஜாரிட்டி இல்லை... அப்போ கர்நாடகாவில் அடுத்து என்னதான் நடக்கப் போகுது?

By Asianet TamilFirst Published Jul 24, 2019, 6:53 AM IST
Highlights

ஒரு வேளை பாஜக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் ராஜினாமா செய்த 16 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாலோ அல்லது பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போது சபையில் பங்கேற்காமல் போனாலோ, பாஜகவால் சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும்.
 

கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்துவிட்ட நிலையில், அடுத்ததாக பாஜக ஆட்சி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 கர்நாடகாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன. இதன்மூலம் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அடுத்து, கர்நாடகாவில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எடியூரப்பா முதல்வர் ஆவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு கர் நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன், மெஜாரிட்டி இல்லை என்றபோதும் எடியூரப்பாவுக்கு ஆளுநர் அவசரமாகப் பதவி பிரமாணம் செய்துவைத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலேயே 3 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. அதன்பிறகுதான் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது.
ஏற்கனவே கர்நாடகாவில் பாஜகவுக்கு இல்லை. அப்படி இருக்க, பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பாரா என்ற கேள்விதான் எழுகிறது. கர்நாடக சட்டப்பேரவையின் மொத்த பலம் 225. ஆட்சி அமைக்க 113 உறுப்பினர்கள் தேவை. பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டு சுயேட்சைகளும், குமாரசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளித்து, கட்சியை விட்டு நீக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ஓர் உறுப்பினர் ஆதரவும் பாஜகவுக்குக் கிடைக்கும். இதன் அடிப்படையில் அக்கட்சியின் உறுப்பினர் பலம் 108 ஆக உயரும்.

 
இங்கேதான் காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பில் தங்கள் பதவியை ராஜினாமா செய்த 16 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு உதவுகிறார்கள். இந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் மும்பையில் தங்கியுள்ளனர். ஒரு வேளை பாஜக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் இந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாலோ அல்லது பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போது சபையில் பங்கேற்காமல் போனாலோ, பாஜகவால் சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும்.


இந்த எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் சபையின் பலம் 208 ஆக இருக்கும். அப்போது ஆட்சி அமைக்க 105 உறுப்பினர்கள் போதுமானது. அந்த எண்ணிக்கை பாஜகவுக்கு இருப்பதால், ஆட்சியைத் தக்க வைக்கலாம். ஒரு முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றால், 6 மாதங்களுக்கு பிரச்னை இல்லை என்பதால், பாஜக அரசு அதுவரை பிரச்னை இல்லாமல் பயணிக்கவும் முடியும். 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்கப்பட்டு, இடைத்தேர்தல் வந்தால், அந்தத் தேர்தல் முடிவின்படி எண்ணிக்கை மாறும்.
கடந்த ஆண்டு எடியூரப்பாவுக்கு அவசரமாக பதவி பிரமாணத்தை ஆளுநர் வஜூவாலா செய்து வைத்ததால், விமர்சனத்து ஆளானார். எனவே, முதலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு எண்ணிக்கை இருக்கிறதா, அதற்கான அத்தாட்சி ஆகியவற்றை வாங்கிய பிறகே, பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்கின்றன அம்மாநில வட்டாரங்கள்.

click me!