முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் சிக்கியது என்ன..? ரொக்கப்பணம் மட்டும் இவ்வளவா..?

Published : Jul 23, 2021, 10:36 AM IST
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் சிக்கியது என்ன..? ரொக்கப்பணம் மட்டும் இவ்வளவா..?

சுருக்கம்

இது அதிமுகவினரை மிரட்டும் செயல். திமுகவின் சதிக்கு அஞ்சமாட்டோம் என ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நடந்த ரெய்டில் ரூ. 25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிக அளவு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் 20 குழுக்களாக பிரிந்து எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உரிய இடங்களில் ரெய்டு நடத்தினர். இது அதிமுகவினரை மிரட்டும் செயல். திமுகவின் சதிக்கு அஞ்சமாட்டோம் என ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது பணிக்காலத்தில் அவரது பெயர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் பெயரிலும், விஜயபாஸ்கர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த சோதனையில், ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!