பேடிஎம், சொமோட்டோ உள்ளிட்ட 29 ஆயிரம் செயலிகள் முடங்கின.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி... காரணம் என்ன.?

By Ezhilarasan BabuFirst Published Jul 23, 2021, 10:21 AM IST
Highlights

இது வலை மற்றும் இணைய பாதுகாப்பு சேவைகளான பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தொழில்நுட்ப தளங்களை வழங்குகிறது, அதேபோல டிஎன்எஸ் என்று அழைக்கப்படும் DOMAIN அமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு ஒரு காரணமாகும்,

பேடிஎம் அமேசான் சொமோட்டோ போன்ற சுமார் 29 ஆயிரம் இணையதளங்கள் செயலிகள்  சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக செயலிழந்தன இதனால் உலக அளவில் பயனாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர் டொமினியன் என்ற அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் இணையதள சேவைகள் முடங்கியதால் தகவல்கள் வெளியாகி உள்ளது

டிஜிட்டல் பண பரிவர்த்தனை தலமான பேடிஎம்மின் சேவைகள் திடீரென வியாழக்கிழமை மாலை முடங்கியது, இதன் விளைவாக நாடு முழுவதும் அதன் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல் கடுமையாக பாதிப்பு அடைந்தனர். இது குறித்து தெரிவித்த பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, பேடிஎம் செயலி முடங்கியது உண்மைதான் என ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அவர், அகமாய் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார். அகமாய் என்பது உலகளாவிய உள்ளடக்க விநியோக நெட்வொர்க், சைபர் பாதுகாப்பு மற்றும் கிளவுட் சேவை நிறுவனம் ஆகும். 

இது வலை மற்றும் இணைய பாதுகாப்பு சேவைகளான பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தொழில்நுட்ப தளங்களை வழங்குகிறது, அதேபோல டிஎன்எஸ் என்று அழைக்கப்படும் DOMAIN அமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு ஒரு காரணமாகும், இதனால் இந்தியாவில் செயல்படும் சுமொடோ, பேடிஎம், அமேசான் செயலி போன்றவைகள் செயலிழந்தன. மேலும் AIRBNB,HSBC,UPS போன்ற வங்கிகள்  பிரிட்டிஷ் ஏர்வேஸ் , ப்ளே ஸ்டேஷன் உள்ளிட்ட இணையதளங்களும் முடங்கின. பின்னர் ஒரு சில மணி நேரங்களில் இணையதளங்கள் செயல்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த இரு மாதங்களில் இணையதளங்கள் முடங்குவது இது இரண்டாவது முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்எஸ் சேவையில் ஏற்பட்டு வரும் சிக்கல்களை நாங்கள் அறிவோம், இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம், இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது சிக்கல்கள் காரணமாக பாதிப்புகளை எதிர்கொண்டால் தயவுசெய்து அகமாய் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும், நேரம் மாற்றம், திருத்தங்கல் மற்றும் புதுப்பிப்புகள் உட்பட மிக சமீபத்திய தகவல்களை நாங்கள் உங்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம் என அகமாய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ஆரம்ப அறிக்கையின்படி, ஃபெடெக்ஸ், பேடிஎம் , என்டிடிவி, கிரிகின்ஃபோ, கிரிக்பஸ், ஹாட்ஸ்டார், சோனிலைவ், ஏர்பின்ப் மற்றும் எச்எஸ்பிசி போன்ற பிற முக்கிய தொழில்நுட்ப தளங்களும் இதேபோன்ற செயலிழப்புகளை எதிர்கொண்டன. மொத்த த்தில் உலக அளவில் சுமார் 29 ஆயிரம் செயலிகள் இந்த தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது குறிப்பிடதக்கது. 

 

click me!