என்னா பேச்சு... வீராப்பு..? டி.டி.வி. தினகரன் ஏமாற்றி விட்டாரா..?

Published : Oct 12, 2021, 04:00 PM IST
என்னா பேச்சு... வீராப்பு..? டி.டி.வி. தினகரன் ஏமாற்றி விட்டாரா..?

சுருக்கம்

இடைத்தேர்தலில் கூட வரிந்துகட்டி நின்ற அமமுக கட்சி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பகிரத்தன முயற்சிகளை எடுக்கவில்லை.   

இடைத்தேர்தலில் கூட வரிந்துகட்டி நின்ற அமமுக கட்சி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பகிரத்தன முயற்சிகளை எடுக்கவில்லை. 

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட மன்றத் தேர்தலில் பலத்தைக்  காட்டுவதற்காக வேட்பாளரை நிறுத்தி கரன்சியை வாரி இறைத்தார்கள். காரணம் சசிகலாவை வசை பாடிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடிக்க வேண்டும் என கரண்சியை அள்ளி வீசியது அமமுக. 

இதனால் உள்ளாட்சித் தேர்தலிலும் கரன்சியை எதிர்பார்த்து  நம்பிக்கையில் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள் சிலர். ஆனால், அமமுக கட்சித்தலைவர் டி.டி.வி.தினகரன் உள்ளாட்சித்  தேர்தலில் கட்சியினரை கண்டுகொள்ளவே இல்லை.  கட்சியினரும் தலைமையில்  இருந்து பணம் வரும் என்ற மகிழ்ச்சியில் சீட்டு வாங்கலாம் என்றுகாத்திருந்து  ஏமாற்றம்தான் மிஞ்சியது.

உள்ளாட்சி தேர்தலுக்கு ஒரு கூட்டம் போடுவதற்கு கூட கட்சியில் வழியில்லாததால், அமமுக குக்கர் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த கூட ஆளில்லாமல் பரிதாபத்திற்கு ஆளாகிவிட்டது. கூட்டணியில் இருந்த முரசு கட்சியில் கூட சரி பாதி அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல் களம் கண்ட நிலையில் தேர்தல்களில் கரன்சியை வாரிவழங்கிய குக்கர்கட்சியின் நிலை பரிதாபத்தோடு உள்ளதாக கட்சியினர் வருந்திக் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..