தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை உடைக்கிறாரா ஜோதிமணி..? நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி..

By Ganesh Ramachandran  |  First Published Jan 31, 2022, 5:27 PM IST

கதராடையில் சென்று வெற்றியை பெற்றுவர அவர் கக்கனும் இல்லை..! கக்கனே வந்தாலும் ச்சும்மா ஓட்டு போட இப்போதைய மக்களும் தயாராய் இல்லை


ஜோதிமணி எம்.பி.க்கு இன்று நடந்த சப்மவம் பற்றி கரூர் திமுக, காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது பல சுவாரஸ்யமான, பரபரப்பான தகவல்கள் கிடைத்தன..

கரூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராகிட ஜோதிமணி துடியாக துடித்தபோது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைகளும் அதை எதிர்த்தனர். அவருக்கு சீட் கொடுக்கவே கூடாது! என்று டெல்லி வரையில் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அவருக்கு சீட் கொடுத்தார் ராகுல்.  சீட் வாங்கிக் கொண்டு கரூருக்கு வந்த ஜோதிமணிக்கு கையில் பணமும் பெரிதாய் இல்லை, கதராடையில் சென்று வெற்றியை பெற்றுவர அவர் கக்கனும் இல்லை..! கக்கனே வந்தாலும் ச்சும்மா ஓட்டு போட இப்போதைய மக்களும் தயாராய் இல்லை.

Tap to resize

Latest Videos

undefined

இந்த சூழலில்தான் ஜோதிமணிக்கு ஆபத்பாந்தனாக வந்து நின்றார் அ.ம.மு.க.விலிருந்து அப்போதுதான் தி.மு.க.வுக்கு தாவியிருந்த செந்தில் பாலாஜி. யெஸ் இப்போதைய மின்சார வாரிய துறை அமைச்சரே தான். தனது நெருங்கிய நண்பர்கள், தொழில் அதிபர்களிடம் சொல்லி ஜோதிமணியின் தேர்தல் செலவுக்கான அடிப்படை தேவைகளை மளமளவென ரெடி செய்தாராம் செந்தில் பாலாஜி. சொல்லப்போனால் ‘அந்தம்மாவின் தேர்தல் பண தேவைக்காக சில சூரிட்டி கையெழுத்துக்களும் போட்டார் செந்தில்பாலாஜி’ என்றும் சொல்கிறார்கள் கரூர் தி.மு.க.வினர்.

அதுமட்டுமல்ல ஜோதிமணியின் பிரசார பயணத்தில அவரோடே அலைந்து திரிந்து அவரை ஜெயிக்க வைத்தார். அதன் பின் நல்ல ஆரோக்கியமான நட்போடே இருந்தனர் இருவரும். ஆனால் செந்தில்பாலாஜி அமைச்சரான பின் இந்த நட்பில் ஒரு விரிசல் துவங்கியது. அது ஈகோவா அல்லது பண ரீதியான சிக்கல்களா என்பது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டனர். சில வாரங்களுக்கு முன் கரூர் மாவட்ட ஆட்சியரை எதிர்த்து ஜோதிமணி, கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதே ஆக்சுவலி அமைச்சரை எதிர்த்துதான்! என்கிறார்கள் தி.மு.க.வினர். ஆனால் அதை தனது சாணக்கிய தனம் மூலமாக சிம்பிளாக உடைத்தெறிந்தார் செந்தில்.

இந்நிலையில்தான் கரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக இன்று மாவட்ட கழக அலுவலகம் சென்றிருந்த போது இருவருக்குள்ளும் மோதல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஆவேசமாக அலுவலகத்தை விட்டு வெளியேறிய ஜோதிமணி “மரியாதை இல்லாம பேசிட்டிருக்காரு, நான் அவரை திருப்பி பேச எவ்வளவு நேரமாகும்?நான் என்ன இவரு வீட்டுக்கு விருந்துக்கா வந்திருக்கேன் என்னை வெளியில போன்னு சொல்றதுக்கு?இவரு என்ன வேணா பேசுவாரா?” என்று கொதிப்பாக கேள்வி கேட்டு, பிரச்னை செய்துவிட்டு காரிலேறி சென்றுவிட்டார்.

’எம்.பி. ஜோதிமணியை அமைச்சர் செந்தில்பாலாஜி அப்படி வெளியேற சொல்லவில்லை, அவராகவே வெளியேறிவிட்டு அபாண்டமாக அமைச்சர் மீது பழி போடுகிறார்.’ என்கின்றனர் தி.மு.க.வினர். கரூர் மாவட்ட காங்கிரஸுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்குவது என்பதில் தன்னை கலந்து கொள்ளாமல் அமைச்சர் முடிவெடுத்ததாலேயே இப்படி அவர் கோபப்பட்டார் என்கிறார்கள்.

இந்நிலையில், “ஏற்கனவே காங்கிரஸை வேண்டா வெறுப்பாகதான் கூட்டணியில் வைத்துள்ளது தி.மு.க. இந்நிலையில் தொடர்ந்து ஜோதிமணி பிரச்னை செய்கிறார். அதுவும் மீடியா மற்றும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் பிரச்னை செய்கிறார். மிக அமைதியாக முடித்திருக்க வேண்டிய விஷயத்தை கலெக்டர் அலுவலகத்தில் படுத்து தூங்கி போராட்டம் செய்து ஆட்சியை அசிங்கப்படுத்தினார். எனவே காங்கிரஸை தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றும் வேலையை அவர் தெளிவாக செய்வது புரிகிறது. ஜோதிமணி யார் உத்தரவில் இப்படி செய்கிறார் என தெரியவில்லை.” என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

click me!