அ.தி.மு.க – பா.ஜ.க. பிரிவு அரசியல் நாடகமா?! தேர்தல் களத்தை உசுப்பிவிடும் விமர்சகர்கள்..

Published : Jan 31, 2022, 04:49 PM IST
அ.தி.மு.க – பா.ஜ.க. பிரிவு அரசியல் நாடகமா?! தேர்தல் களத்தை உசுப்பிவிடும் விமர்சகர்கள்..

சுருக்கம்

“இப்போதைக்கு இதை செய்வோம். ஒட்டுமொத்தமாக நம்மோட எய்ம், தி.மு.க.வை வீழ்த்துறதா இருக்கணும்.”

ஏற்கனவே எதிர்பார்த்த படியேதான் நடந்திருக்கிறது, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தமிழக பா.ஜ.க. வெளியேறி, தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்துள்ள செயல். அண்ணாமலையின் இந்த அறிவிப்பில் அதிர்ச்சியொன்றும் இல்லை, ஏனென்றால் இது இப்படித்தான் போகும் என்று சில நாட்களுக்கு முன்பே முணுமுணுக்கப்பட்ட ரகசியம்தானே! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

20 சதவீததம் தொகுதிகளை அ.தி.மு.க.விடம் கேட்டது பா.ஜ.க.! ஆனால் அதை ஒதுக்க எடப்பாடியார் மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் முன்வராத காரணத்தினால் கூட்டணியிலிருந்து தாங்கள் வெளிவந்துவிட்டதாகவும்,  அறிவித்திருக்கும் பா.ஜ.க., தேசிய அளவில் இந்த கூட்டணி தொடர்வதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் இந்த வெளியேற்றமானது ‘அ.தி.மு.க.வுடன் இணைந்து அது நடத்தும் பக்கா அரசியல் நாடகம்’ என்கிறார்கள் விமர்சகர்கள். ஏன்? என்று கேட்டபோது அவர்கள் சொல்லும் காரணங்கள்…

“தமிழகத்தில் அன்றே துவக்கப்பட்ட நாம்தமிழர் கட்சி, நேற்று துவக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு கூட தமிழக பா.ஜ.க.வுக்கு இல்லை! என்பதே உண்மை. அதாவது மக்கள் அக்கட்சியை விரும்பவேயில்லை! என்று சொல்லிவிட முடியாது. மத்திய பா.ஜ.க. எடுக்கின்ற தமிழகத்துக்கு எதிரான முடிவுகளும், இங்கிருக்கும் திராவிட இயக்கங்கள் பா.ஜ.க.வை செய்யும் சித்தரிப்புகளும்தான் அக்கட்சி பற்றிய எண்ணத்தை மக்களிடம் எதிர்மறையான நிலையில் கொண்டு வைத்ததற்கு காரணம்.

அதனாலதான் அ.தி.மு.க.வோடு அடிச்சுப் பிடிச்சு கூட்டணி வெச்சுக்கிட்டாங்க கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்ல. நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி, சட்டமன்றத்திலோ மேற்கு தமிழகத்தில் மட்டும் பிழைத்தது அ.தி.மு.க. ’பா.ஜ.க.வோடு சேர்ந்து நாமும் தோற்கணுமா? கழட்டிவிடுங்க அந்த கட்சியை’ அப்படின்னு அ.தி.மு.க.வின் இரண்டாம் நிலை நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எல்லாருமே எவ்வளவோ சொல்லியும் எடப்பாடியாரும், பன்னீரும், மற்ற மாஜி அமைச்சர்களும் கேட்கவேயில்லை. காரணம், கூட்டணியை விட்டு விலக்கினால் தங்களோட சொத்துக்கள் மீது ரெய்டு பாயும்! எனும் பயம். நடந்து முடிந்த, விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் இதே மோசமான தோல்வியைதான் இந்த கூட்டணி சந்திச்சுது.

இந்த நிலையிலதான் சமீபத்தில் அந்த இரு கட்சிகளோட மாநில தலைவர்களும் ரகசியமாக கூடி ஒரு முடிவெடுத்தாங்க. அப்போ பேசிய எடப்பாடியாரும், பன்னீரும் ‘நம்மோட பொது எதிரி தி.மு.க. ஆளுங்கட்சியான அதை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வலுவா தோற்கடிக்கணும். சூழ்நிலையும் அவங்களுக்கு எதிராதான் இருக்குது. குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தரும் திட்டத்தை துவக்காதது, தைப்பொங்கலுக்கு பணம் கொடுக்காதது, பொங்கல் தொகுப்பு பொருட்கள் மிக மோசமாக இருந்தது இதெல்லாம் தமிழக மக்களை பரவலா தி.மு.க.வுக்கு எதிரா திருப்பியிருக்குது.

இந்த நேரத்தில் நாம ஒண்ணா சேர்ந்து நின்றா வழக்கம் போல மக்கள் எதிர்த்து வாக்களிப்பாங்க. அதனால, நாம பிரிஞ்சு நிற்கலாம்.  இது மூலமா தி.மு.க.வின் எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக எங்களுக்கு விழும், வழக்கமான எங்களின் வாக்கு வங்கியும் எங்களை ஆதரிக்கும். இது மட்டுமில்லாமல் நீங்க (பா.ஜ.க.) எங்களோடு இல்லாத காரணத்தால சிறுபான்மை வாக்கு வங்கியில் கணிசமானவர்களும் எங்களை ஆதரிக்கும் வாய்ப்பிருக்குது. மேலும், உங்க கட்சியோட தனி பலத்தையும் நீங்க தனியா நிற்குறது மூலமா தெரிஞ்சுக்க முடியும்.  நாங்க உங்க கூட இல்லாதது மூலமாக உங்களுக்கு வர துடிக்கிற வாக்குகளும் உங்களை வந்து சேரும். மேலும் வார்டு அளவில் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மொத்தத்துல ஆளுங்கட்சியாக இருக்கிற தி.மு.க.வுக்கு கணிசமான தோல்வியை உருவாக்குறது மூலமா, ஆட்சிக்கு வந்து எட்டே மாசத்துல மக்களின் ஆதரவை இழந்த தி.மு.க!ன்னு நாம எதிர்வரும் தேர்தல்களில் பிரசாரம் பண்ண வசதியா இருக்கும்.

“இப்போதைக்கு இதை செய்வோம், நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம். ஒட்டுமொத்தமாக நம்மோட எய்ம், தி.மு.க.வை வீழ்த்துறதா இருக்கணும்.” என்று சொல்லியுள்ளனர்.

சில கட்ட பேச்சுவார்த்தைகள், அலசல்களுக்குப் பிறகு மேலிட பா.ஜ.க. அனுமதியளிக்க, தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலையும் கூட்டணியிலிருந்து தாங்கள் விலகுவதை அறிவித்தார். ஆக இது ஒரு டிராமாவே.” என்கிறார்கள்.

மெய்யாலுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!